பக்கம் எண் :

மூலமும் உரையும்677



மூங்கில் போன்ற டொல்களைத் தழுவுவதற்குப் பெரிதும் விரும்பி; தருவின் கிழவன்தான் என நிற்றி-தேவேந்திரன் என்னும்படி ஈண்டுவந்து நிகின்றாய்; நின் உயிர்க்கு இன்னல் நேர்தரின்-இங்ஙனம் வருதலால் நின்னுடைய உயிர்க்குத் துன்பம் ஏற்பட்டால்; திருவின் தன் உயிர்க்கு இன்னல் தவறு இல-திருமகள் போல்வளாகிய எம்பெருமாட்டியின் உயிர்க்கும் துன்பம் பல வருதல் தவறமாட்டா; ஆஆ-அந்தோ!; இரண்டு உயிர் தனப்பு என-அங்ஙனமாயின் என் என்பிற்குரிய இரண்டு உயிர்கள் போம் என்று யான் கருதும்படி; எனது கண் புணர-அடிச்சியாகிய என்னுடைய கண்கள் காணும்படி என்க.

     (வி-ம்.) குறி-அடையாளங்கள். அவை இரவுக்குறி இடத்தின் அடையாளங்கள். ஐந்து-ஐந்துவகை. அவை முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்பன. இவற்றுள் மயிரை உச்சியிற் சேர்த்து முடித்தல் முடி எனவும், பக்கத்திற் சேர்த்து முடித்தல் கொண்டை எனவும், பின்னே அள்ளிச் செருகுதல் சுருள் எனவும், சுருட்டி முடித்தல் குழல் எனவும், பின்னி விடுதல் பனிச்சை எனவும் கூறப்படும். அமை-மூங்கில். நசைஇ-விரும்பி. தருவின் கிழவன் என்றது தேவேந்திரனை. தேவேந்திரன் அகலிகை தோளை விரும்பி இரவில் காட்டினூடே சென்று செவ்வி பார்த்து நின்றாற்போல நீயும் நிற்கின்றனை என அசதியாடினாளு மாயிற்று. நிற்றி-நிற்கின்றாய். நீ அஞ்சாது இங்ஙனம் வந்து நிற்பினும் யாமதற்கொவ்வோம் என்பது குறிப்பு. இன்னல்-ஈண்டு சாதல்மேற்று. திரு என்றது தலைவியை. தன்: அசை. தலைவன் உயிர்க்கு இன்னல் நேரின் சாதல் ஈறாக அவள் எய்தும் இன்னல் சாலப்பல என்பாள் இன்னல் தவறில எனப் பன்மையின் முடித்தாள். இன்னல்கள் வருதலின் தவறமாட்டா என்பது கருத்து. ஆஆ: இரக்கக் குறிப்பு. இரண்டு உயிர் என்றது எனதன்பிற்குரிய உயிர் என்பதுபட நின்றது. தணைப்புஆம் என ஆக்கச்சொல் வருவித்தோதுக.

24 - 26: இக்கொடுவழி...........................புகழ்

     (இ-ள்) இ கொடுவழி-இந்தக் கொடுமையாகிய வழியில்; இ வரவு-நீ இவ்வாறு துணிந்து வருதலை; என்றும் விடுவது நெடும்புகழ்-இனி எப்பொழுதும் நினையாதொழிவது நினக்குப் பெரிய புகழாகும்; இன்றேல் ஒரோவழி நினக்குப் பெரிய பழியாய் விடுங்காண் என்க.

     (வி-ம்.) இவ்வரவு என்புழி இங்ஙனம் அஞ்சாது துணிந்து நீ வருதல் என்பதுபட நின்றது. விடுவது புகழ் எனவே, விடாதுவரின் அது பெரும்பழியாய் முடியினும் முடியும் என்பது குறிப்பெச்சம்.

     இதனை, வரைநாட! வேலோய்! அரையிருள் யாமத்துக் கூடற் குணக்குன்றினன் சரணடையாக் கோளினர்போல, குறித்துக் கதுப்பினள் தோள்நசைஇ இரண்டுயிர் தணப்பென என் கண்காண இக்கொடு வழியில் நின்வரவு விடுவது நெடும்புகழாமென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனுன் அவை.