பக்கம் எண் :

688கல்லாடம்[செய்யுள்98]



நெடிய திருப்பரங்குன்றத்தினது; ஆட்சி உற்றனள் ஆதல் வேண்டும்-ஆட்சியாகிய இடத்தின்கண் அகப்பட்டவள் ஆதல் ஒருடலை ஐயமின்று; என்க.

     (வி-ம்.) அதிருவர்: அன்மொழித்தொகை; கடல் என்க.கொக்கு-மாமரம். மாமரமாகி நின்ற சூரபதுமன் என்க. களவு-வஞ்சகம்; மாயமுமாம். புகர்-புள்ளி. ஈண்டுக் குருதிக்கறையாகிய புள்ளி. தகரம்-ஒருவகைச் சாந்து. தகரமரமுமாம். நெடுவரை-ஈண்டுத் திருப்பரங்குன்றம். வரைக்கு: உருபு மயக்கம். ஆட்சியுறுதல்-தெய்வத்தின் ஆட்சியுட்பட்ட இடத்திற் சேர்ந்து அதனாற் றீண்டப்படுதல். வேண்டும் என்பது, ஈண்டு ஒருதலை என்னும் பொருள்மேனின்றது. ஐயமில்லை என்பது குறிப்பெச்சம்.

     இனி இதனை, சிறுநகை முன்னையள் அல்லள்; கடவுள் கூடல் கூடாக் குணத்தினர்போல வேறுபட்டிருக்கின்றாள். அவள் பார்வையும் வேறுவேறாயின: ஐம்புலமும் ஒருவாய்ப் புக்கன. ஆதலால் அத் தேமொழி வரைக்கு ஆட்சியுற்றனள் ஆதல்வேண்டும்; ஐயமின்று என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.