|
அடைந்த ஒருபதின்மூன்று
குற்றமும்-அவற்றை எய்திய பதின்மூன்று குற்றங்களும் என்க.
(வி-ம்.)
முற்கூறப்பட்ட கருகி நொய்தாதல் முதலிய முந்தைய நூலில் கூறப்பட்ட பதினாறு வகைக் குற்றங்களேயன்றித்
திட்டை முதலாகக் காஞ்சுண்டை ஈறாகப் பிற்காலத்து நூல்களிலே கூறப்படுகின்ற பதின்மூன்று
குற்றங்களும் உள என்பது கருத்து. முந்திய நூலின் மொழிந்தன குற்றமும் என முற்கூறியபடியால்
இக்குற்றங்கள் பிந்து நூலிற் கூறப்பட்டவை என்பது பெற்றாம்; எனவே கல்லாடர் காலத்திலே
புதிய மணிநூல்கள் தோன்றியிருந்தன என்பதும், தமிழகத்தில் மிகப் பழைய காலத்திலேயும்
மணிநூல்கள் இருந்தன என்பதும் உணரற்பாலன.
45
- 47: இவை............................அல்லள்
(இ-ள்)
இவை எனக் கூறிய நிறை அருள் கடவுள்-இவை இவை என்று அமைச்சர் முதலியோர்க்குக் கூறியருளிய
நிறைந்த அருளையுடைய சிவபெருமானுடைய; கூடல் கூடாக் குணத்தினர்போல-மதுரையம்பதியை எய்தாத
தீக்குணமுடையோர் (மாறுபட்டிருத்தல்) போல மாறுபட்டிருக்கின்றாள்; முன்னையள் அல்லள்
முன்னையள் அல்லள்-என் மகள் பண்டுபோன்றிருந்திலள்! பண்டுபோன்றிருந்திலள், பெரிதும்
வேறுபட்டிருக்கின்றாள்; என்க.
(வி-ம்.)
இவை என்று அமைச்சர் முதலியோர்க்குக் கூறிய கடவுளுடைய கூடல் என்க. 1-முதல் - 45 வரையில்
அடிதோய்ந்து வணிகன் ஆகி எடுத்து வாக்கால் குறியும் பன்னிரண்டும் குற்றமும் குணம்பத்தும்
நிறமெட்டும் நிறமாறும் நிறமும் குற்றமும் இவை எனக் கூறிய கடவுள் என இயைபு காண்க.
58:
சிற்றிடை..........................தானே
(இ-ள்)
சிற்றிடை பெருந்தோள் தேம் மொழி-சிறிய இடையையும் பெரிய தோள்களையும் இனிய மொழிகளையும்
உடைய என் மகள் இங்ஙனம் மாறுபட்டிருத்தலாலே; என்க.
(வி-ம்.)
சிற்றிடை பெருந்தோள் என்புழிச் செய்யுளின்ப முணர்க.
54
- 57: அதிர்....................................வேண்டும்
(இ-ள்)
அதிர் உவர் கொக்கின் கள்வு உயிர் குடித்த-முழங்காநின்ற கடலினிடையே மாமரமாய்
நின்ற சூரபதுமனுடைய வஞ்சகமுடைய உயிரைப் பருகிய; புகர் இலை நெடுவேல் அறுமுகக் குளவன்-குருதிக்கறை
படிந்த நெடிய வேற்படையினையும் ஆறு முகங்களையுமுடைய முருகப்பெருமானுடைய; தகரம் கமழும்
நெடுவரைக்கு-மயிர்ச்சந்தனங் கமழாநின்ற
|