|
என வரும் பழம் பாடலினுங்
காண்க. அரத்தம்-செவ்வரத்த மலர். திலகம்-குங்குமப்பூ. உலோத்திரம்-வெள்ளுலோத்திர
மலர்.
சோரி-குருதி.
கவிரலர்-முண்முருக்கமலர். குன்றி-குன்றிமணி.
35
- 37: அசோக......................ஆறும்
(இ-ள்)
அசோகப் பல்லவம் அலரி செம்பஞ்சு கோகிலக்கண் நீள் இலவு அலர் செம்பு எனத் தரும்-அசோகந்
தளிர் நிறமும் அலரிமலர் நிறமும் செம்பஞ்சு நிறமும் குயிற்கண் நிறமும் நீண்ட இலவினது
மலர் நிறமும் செம்பின் நிறமும் என்னும் இவற்றை ஒக்கும் என்று கூறப்படுகின்ற; சௌகந்திதன்
நிறம் ஆறும்-சௌகந்தி என்னும் சாதிமாணிக்கத்தின் அறுவகைப்பட்ட நிறங்களும் என்க.
(வி-ம்.)
பல்லவம்-தளிர். அலரி-ஒருவகைச் செடி. இதனை அரளி என்றும் கூறுவர். கோகிலம்-குயில்.
செம்பு-தாமிரம்.
கோகிலக்கண்
செம்பஞ்சு கொய்ம்மலர்ப் பலாசம்
அசோகப் பல்லவம் அணிமலர்க் குவளை
இலவத் தலர்களென் றாறு குணமும்
சௌகந் திக்குச் சாற்றிய நிறனே |
என்பது பழம்பாடல்.
38
- 39: செங்கல்............................ நிறமும்
(இ-ள்)
செங்கல் குராமலர் மஞ்சள் கோவை-செங்கல்லும் குரவமலரும் மஞ்சளும் கொவ்வைக்கனியும்;
குங்குமம் அஞ்சில்-குங்குமமும் ஆகிய இவற்றின் நிறங்களாகிய ஐந்தனையும் தனித்தனியே
பெற்றுள்ள; கோவாங்கு நிறமும்-கோவாங்கு என்னும் சாதிமாணிக்கங்களின்- நிறமும் என்க.
(வி-ம்.)
செங்கல்-காவிக்கல். குரா-குரவமரம். கோவை-கொவ்வைக்கனி. கோவாங்கிற்குத் திருவிளையாடற்
புராணத்தில் கோவாங்க ஒளி குரவு குசும்பைமலர் செங்கல் கொவ்வைக்கனி என்று ஒரு நான்கு
என நான்கு நிறங்களே கூறப்பட்டன.
40
- 44: திட்டை...............................குற்றமும்
(இ-ள்)
திட்டை ஏறு சிவந்த விதாயம் மொக்கல்-திட்டையும் ஏறும் சிவந்த விதாயமும் மொக்கலும்;
புற்று குருதி தொழு தினைமணி கோகனகம்-புற்றும் குருதியும் தொழுவும் தினைமணியும் கோகனகமும்;
கற்பம் பாடி மாங்கிசகந்தி வளர் காஞ்சுண்டை என்று-கற்பமும் பாடியும் மாங்கிசகந்தியும்
மிகாநின்ற காஞ்சுண்டையும் என்று கூறப்படுகின்ற; ஆங்கு
|