|
களிலே கூறப்பட்டுள்ள
அம்மாணிக்கத்தின் பதினாறுவகைக் குற்றங்கலும் என்க.
(வி-ம்.)
கருகல், நொய்தல், காற்றேறு, வெகுளி, திருகல், முரண், மண்ணேறு, இறுகல், மத்தகக்
குழிவு, காசம், இலேசு, உமி, எச்சம், பொரிவு, புகைதல், புடாயம், சந்தை, நெய்ப்பிலி
என்னும் பதினாறும் மாணிக்கங்களுக்கு முற்காலத்தே கூறப்பட்ட குற்றங்களாகும் என்றவாறு.
எனவே பிற்காலத்து நூல்களிற் கூறப்பட்ட குற்றமும் உள என்றாராயிற்று. அவை பின்னர்க்
கூறப்படும்.
27
- 30: சாதகப்புள்......................பத்தும்
(இ-ள்)
சாதகப்புள் கண் தாமரை கழுநீர்-சாதகப்புள்ளின் கண்போன்ற நிறமும், தாமரை மலர்
நிறமும், செங்கழு நீர் மலர் நிறமும்; கோபம் மின்மினி-இந்திர கோபப் புழுவின்
நிறமும், மின்மினியின் நிறமும், கொடுங்கதிர் விளக்கு-ஞாயிற்றின் நிறமும், விளக்கின்
நிறமும்,; வன்னி-வன்னிப்பூ நிறமும்; மாதுளம்பூ விதை-மாதுலம்பூவின் நிறமும், மாதுளை
விதையின் நிறமும்; என்னப் பன்னும்-என்று கூறப்படுகின்ற இந்த நிறங்களை ஒத்த; சாதுரங்க
ஒளிக்குணம் பத்தும்-சாதுரங்கம் என்னும் சாதிமாணிக்கங்கட்குரிய ஒளிக்குணங்கள் பத்தும்
என்க.
(வி-ம்.)
சாதுரங்க மாணிக்கத்தின் ஒளி நிறம், சாதகப்புள்ளின் கண்ணும் செண்டாமரைப்பூவும்
செங்கழுநீர் மலரும் இந்திரகோபமும் மிம்மினியும் ஞாயிறும் விளக்கும் வன்னிமலரும்
மாதுலம்பூவும் விதையும் என்னும் இவற்றின் நிறங்கள் போன்று பத்துவகைப்படும் என்றவாறு.
31
- 34: செம்பஞ்சு.................................நிறமும்
(இ-ள்)
செம்பஞ்சு அரத்தம் திலகம் உலோத்திரம்-செம்பஞ்சும் செவ்வரத்த மலரும் திலகமலரும்
வெள்ளோத்திர மலரும்; முயலின் சோரி சிந்தூரம் குன்றி கவிர் அலர் என்ன-முயலின்
குருதியும் சிந்தூரமும் குன்றிமணியும் முண் முருக்க மலரும் என்னும் இவற்றினுடைய; கவர்நிறம்
எட்டும்-கண்டோர் கண்ணைக் கவரும் நிறங்கள் எட்டனையும் ஒக்கும் என்று; குருவிந்தத்திற்
குறித்தன நிறமும்-குருவிந்தமென்னும் சாதி மாணிக்கங்கட்குக் குறிக்கப்பட்டனவாகிய
நிறங்களும், என்க.
(வி-ம்.)
குருவிந்தமாணிக்கம் செம்பஞ்சு முதலியவற்றின் நிறம் போன்ற எண்வகை நிறமுடையன என்க.
இவற்றை,
திலகம் உலோத்திரம்
செம்பருத்திப்பூக்
கவிரலர் குன்றி முயலுதி ரம்மே
சிந்துரங் குக்கிற் கண்ணென வெட்டும்
எண்ணிய குருவிந்த மன்னிய நிறமே |
|