பக்கம் எண் :

684கல்லாடம்[செய்யுள்98]



லிட்டு நோக்குமிடத்தும் துலாக்கோல் கொண்டு நிறுக்குமிடத்தும்; நல் தகட்டில் சேர்க்கின்-பொற்றகட்டிலே பதித்துப் பார்க்குமிடத்தும்; சுடர்வாய்ச் சேர்க்கின்-ஞாயிற்றின் எதிரே சேர்க்குமிடத்தும்; வெயிலில் சேர்க்கின்-வெயிலிற் காட்டுமிடத்தும்; குச்சையின்-குச்சை வாங்குமிடத்தும்; மத்தகக் குறியின்-மாணிக்கத்திற்குரிய உச்சியிலக்கணத்தினும்; ஓரத்தின்-கோடி மழுங்காமையும் கோடியுடைமையுமாகிய விளிம்புக் குறிகளினும்; நெய்த்து-நெய்ப்புடைமையினும்; பார்வையின்-கூர்ந்து நோக்குழி; நேர்ந்தும் சிவந்தும்-கட்கினிதாய் நுண்ணொளியுடைத்தாய்ச் சிவந்தும்; உடைய ஒத்த நற்குணம் பன்னிரண்டும்-இலக்கணத்திற்குப் பொருந்திய அவற்றினுடைய நற்குணம் பன்னிரண்டும் என்க.

     (வி-ம்.) இப்பகுதியில் பண்டைக் காலத்தே மணிகளை ஆராயும் வகைகள் விரிக்கப்படுகின்றன. தேய்த்தல்-அராவுதல். சேர்க்கின் என்பதனை ஏற்ற பெற்றி கூட்டிக்கொள்க. தூக்குதல்-நிறுத்தௌப் பார்த்தல். குச்சை-குச்சை வாங்குதல். அஃதாவது மணிகளை இறுதியாக ஒப்பஞ் செய்தல். இதனை இக்காலத்தார் குச்சுவாங்குதல் என்பர். (கதிரைவேற் பிள்ளை தமிழகராதியிற் காண்க.. பக்கம் - 467;) மத்தகம்-மணியின் உச்சி. குறி-இலக்கணம். ஓரம்-கோடி விளிம்பு. கோடிகளுடைமையும் கோடிகள் மழுங்காமையும் முறியாமையும் கோடிகளின் நல்லிலக்கணமாம். நெய்தல்-நெய்ப்புடைத்தாதல். இதனை இக்காலத்தார் நீரோட்டம் என்பர். நேர்தல்-தெளிந்த நுணுகிய ஒளியுடைத்தாதல். சிவத்தல்-மாணிக்கத்தின் சிறப்பு.

     இனி நற்குணம் பன்னிரண்டும் என்பதற்குச் சரைமலம் கீற்று, சப்படி, பிளத்தல், துலை, கரி, விந்து, காகபாதம், இருத்து, கோடி இல்லன், கோடி முறிந்தன, தாரை, மழுங்கல் என்னும் இப்பன்னிரண்டு குற்றங்களும் இல்லாமையே பன்னிரண்டு குணங்கள் எனக் கோடலுமாம்.

21 - 24: கருகி......................குற்றமும்

     (இ-ள்) கருகி நொய்து ஆதல்-கருகியிருத்தலும் நொய்யதாயிருத்தலும்; காற்று வெகுளி-காற்றேறும், மழுங்கியிருத்தலும்; திருகல் முரண்-திருகல் முறுகலுடைத் தாதலும் மறுபட்ட இருவேறு நிறங்களை யுடைத்தாதலும்; செம்மண்-செம்மண் ஒட்டியது போற்றோன்றுதலும்; இறுகலும்- இறுகுதலும்; மத்தகக் குழிவு-முடி குழித்திருத்தலும்; காசம் இலைச்சு உமி-காசமும், இலேசும், உமியும்; எச்சம்-எச்சமும்; பொரிவு-பொரிந்திருத்தலும்; புகைதல்-புகை படிந்திருப்பதுபோலத் தோன்றுதலும்; புடாயம்-புடாயமும்; சந்தை-சந்தையும்; நெய்ப்பிலி-நெய்ப்பிலதாதலும்; எனத்தகும் முந்திய நூலின் மொழிந்தன பதினாறு குற்றமும்-எனப்படும் முந்திய நூல்