|
துள்ள மலைக் குவடுகளாகிய
கொடுமுடிகல் நிறைந்த மக்கம் காளபுரம் தும்புரம் சிங்களம் என்னும் இந்த நான்கிடங்களிலே
கிருதயுகமும் திரேதாயுகம் துவாபரயுகம் கலியுகம் என்னும் இந்த நான்கு காலங்களிலும்;
நிகழ்ந்தன குறியும்-உருவாகிய அம் மாணிக்கங்களின் அடையாளங்களும் என்க.
(வி-ம்.)
சமனொளி சூழ்ந்த குடுமிச்சேகரம் என மாறுக. மாணிக்கங்கள் உருவாதற்குக் குறைவற்ற கதிரொளி
காரணம் என்பார் சமனொளி சுழ்ந்த என்றார்; எனவே மிகையான வெப்பமும் மிகையான தட்பமு
முடைய நாடுகளிலே மாணிக்கங்கள் தோன்றா என்பது பெற்றாம். நான்கின் என இடமென்றதால்
காலமென்றாதல் கூறாமையால் நான்கிடங்களில் நான்கு காலங்களில் என விரித்தோதுக;
என்னை?
வாளவிரு மாணிக்கம்
கிரேதமுதலுக நான்கும் வழியே மக்கம்
காளபுரம் தும்பரம் சிங்கள மிந்நாள் கிடைப்படும்
(பரஞ்-திருவி-மாணிக்-
37) |
எனப் பிற சான்றோரும்
ஓதுதல் உணர்க.
குடுமிச்சேகரம்:
இருபெயரொட்டு. குடுமிச்சேகரத்து எனவே மாணிக்கம் குறிஞ்சி நிலத்திலே தோன்றும் என்பது
பெற்றாம்.
நிகழ்தல்-உருவாடல்.
குறி-அடையாளம்; இலக்கணம்.
14
- 15: குருவிந்தம்...........................நான்கும்
(இ-ள்)
குருவிந்தம் சௌகந்தி கோவாங்கு சாதுரங்கம் எனும்-குருவிந்தமும் சௌகந்தியும் கோவாங்கும்
சாதுரங்கமும் என்று கூறப்படும்; சாதிகள் நான்கும்-அம்மாணிக்கங்களின் நான்கு சாதிகளும்;
என்க.
(வி-ம்.)
இவற்றுள் குருவிந்தம், விந்தம் என்றும் இரத்டவிந்து என்றும் கூறப்படும்; சௌகந்தி,
நீலம் என்றும் நீலகந்தி என்றும் கூறப்படும்; கோவாங்கு, படிதம் என்றும் கூறப்படும்;
சாதுரங்கம் பதுமம் என்றும், பதுமராகம் என்றும் கூறப்படும். இதனை,
பதுமமும் நீலமும்
விந்தமும் படிதமும்
விதிமுறை பிழையா விளங்கிய சாதியும் (சிலப்-
14. 186 - 7) |
என இளங்கோவடிகளார்
கூறுமாற்றானும் இதற்கு அடியார்க்கு நல்லார் கூறும் நல்லுரையானும் வன்னியிற் கிடக்கும்
வருணநாற் பெயரும் உன்னிய சாதுரங்க மொளிர் குருவிந்தம் சௌகந்தி கோவாங்கு தானாகும்மே
என அவர் தரும் மேற்கோளானும் உணர்க.
15
- 20.: தேய்க்கின்...............................பன்னிரண்டும்
(இ-ள்)
தேய்க்கின் நெருப்பில் சோக்கின் அங்கையில் தூக்கின்-இனி அம்மணிகளை ஆராய்வோர்
அவற்றைத் தேய்க்குமிடத்தும் தீயின்கன் சேர்க்குமிடத்தும் உள்ளங்கையி
|