|
1 - 4: கதிர்...............................எடுத்து
(இ-ள்)
கதிர் நிரை பரப்பும் மணிமுடித் தேவர்-ஒளியை நிரலாகப் பரப்புகின்ற மணிகளையுடைய
முடியணிகலனையுடைய அமரர்தாமும்; கனவிலும் காணாப் புனைவு அருந் திரு அடி-கனவிலும்காணுதற்கியலாத
புனைந்து கூறுதலும் அரியவாகிய தன் அழகிய அடிகள்; மா நிலந் தோய்ந்து-பெரிய நிலத்திலே
தொயும்படியும்; ஓர் வணிகன் ஆகி-ஒரு மணி வணிகனாகத் திருவுருவங்கொண்டருளி; எழுகதிர்
விரிக்கும் திருமணி எடுத்து-தம்மகத்தினின்றும் எழாநின்ற ஒளியைப் பரப்புமியல்புடைய
மாணிக்க மணியைச் சுமந்துவந்து என்க.
(வி-ம்.)
கதிர்-ஒளி. கனவிலும் என்புழி, உம்மை இழிவு சிறப்பு. புனைதல்-கற்பனை செய்து கூறுதல்.
தோய்ந்து-தோய என்க. எழுகதிர்: வினைத்தொகை. திருமணி-மாணிக்கமணி. இஃது ஒன்பான்
மணிகளுள் ஒன்று.
5
- 11: வரையா...............................வாக்கால்
(இ-ள்)
வரையாக் கற்புடன்-எழுதி ஓதாமல் கேல்விமாத்திரையானே கற்கும் கற்றலோடே; நான்கு
எனப் பெயர் பெற்று-இருக்கு யசுர் அதர்வணம் சாமம் என்னும் நான்கு பெயர் பெற்று; ஆங்கு
ஆங்கு ஆயிரம் கோடி சாகைகள் மிடலொடு விரித்து-ஏற்புடைய இடந்தோறும் இடந்தோறும்
எண்ணிறந்த கிளைகளை ஆற்றல்டே விரித்து, சருக்கம் வீயாவிந்தம் பதநிரை நாதம் மறைப்பு
புள்ளி மந்திரம் ஒடுக்கம் என்று-சருக்கமும் கெடாத விந்தமும்சொற்றொடரும் ஒலியும்
மறைப்பும் புள்ளியும் மந்திரமும் ஒடுக்கமும் என்று கூறப்படுகின்ற; இனையவை விரிந்து
இவ்வுள்ளுறுப்பக்களாலே மிகவும் விரித்து; பல பொருள் கூறும்-அறமுதலிய பல பொருள்களையும்
கூறாநின்ற; வேதம் முளைத்த-வேதங்கள் தோன்றுதற்கிடனான; ஏதம் இல் வாக்கால்-குற்றமற்ற
மொழிகளாலே; என்க.
(வி-ம்.)
வரையாக் கற்பு-எழுதிப் பயிலாமல் கேள்விமாத்திரையானே கேட்டுப் பயிலும் பயிற்சி.
கற்பு-கற்றல். நான்கு-இருக்கு முதலியன. ஆயிரங் கோடி சாகைகள் என்றது எண்ணிறந்த சாகைகள்
என்றவாறு. சாகை-கிளை. மிடல்-ஈண்டுச் சொல்லாற்றலும் பொருளாற்றலுமாம். ஆங்காங்கு
என்றது, அதிகாரப்பட்ட இடந்தொறும் இடந்தொறும் என்றவாறு. சருக்கம் முதலியன உள்ளுறுப்புக்கள்.
வீயா-கெடாத. மறைப்பு-கரந்துறை. பல பொருள் என்றது அறம் பொருள் இன்பம் வீடு என்பனவும்
பிறவும் என்றவாறு. முளைத்த வாக்கு-முளைத்தற்கிடனான மொழி.
12
- 13: குடுமி.....................குறியும்
(இ-ள்)
சமன் ஒளி சூழ்ந்த குடுமிச் சேகரம் நிறைதரும் நான்கின்-ஞாயிற்றின் ஒளி ஏற்றிழைவின்றிச்
சமனாகச் சூழ்ந்
|