பக்கம் எண் :

மூலமும் உரையும்81



  தெம்மெதிர்ப் பின்றி யிருந்தெதிர்ப் பட்டு
மறைவழி யொழுகா மன்னவன் வாழும்
35
  பழிநாட் டார்ந்த பாவம் போலச்
சேர மறைந்த கூரிரு ணடுநா
ளரிதிற் போந்தனி ரென்றொர்
பெரிதின் வாய்மை வெற்பனிற் பெறினே.

(உரை)
கைகோள்: களவு. தலைவிகூற்று

துறை: செலவு நினைந்துரைத்தல்.

     (இ-ள்) இதற்கு ‘உயிரினும் சிறந்தன்று நாணே..............தோன்றுமன் பொருளே’ என்னும் நூற்பாவின்கண் (தொல். களவி-22) ‘தாவினன்மொழி கிழவி கிளப்பினும்’ என்னும் விதிகொள்க.

1-5: உயிர்.............................புகுந்து

     (இ-ள்) உயிர் புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும்-உயிர் பொருந்துதற் கிடமாகிய உடம்பிடந்தொறும் உடம்பிடந்தொறும்; பாடகம் போல பழவினை புகுந்த- இடைவிடாது காலைப் பாடகம் சூழ்ந்து கிடந்தாற்போலச் சூழ்ந்து கிடந்த பழவினை கொல்லும் விருப்பங் கொண்டு தொடர்ந்து உட்புகுந்தாற்போல; முதிர் புயல் குளிரும் எழுமலைபுக்க-சூன் முதிர்ந்த முகில் முழங்கா நின்ற ஏழு மலையினும் புகுதற்குக் காரணமாய; கட்டு உடைச் சூர் உடல்-கட்டினையுடைய சூரபன்மா உயிரினைப் பருகும் காமம் கொண்டு பற்றி உள்புகுந்து-விருப்பங் கொண்டு அவனைத் தொடர்ந்து சென்று கடலினுட் புகுந்து என்க.

     (வி-ம்.) சட்டகம்-உடம்பு உழிதொறும் உழிதொறும்- இடந்தொறும் இடந்தொறும். பாடகம்-மாதர் காலணியில் ஒன்று. இது பழவினைக்கு உவமம். “பாடகம் போலச் சூழ்ந்த பழவினை” என்றார் சிந்தாமணியினும். காமம் கொண்டு புகுந்த என உவமைக்கு ஒட்டுக. பாடகம் பழவினைக்கும் பழவினை புகுதல் வேல்புகுதற்கும் உவமைகள் ஆதலின் அடுக்கிய தோற்றம் அன்மை உணர்க. எழுமலை-ஏழுமலை.

     பழவினை புகுதற்குக் காரணமாகிய இடத்தினையுடைய நெஞ்சம் புகுந்தாற்போல எனினுமாம். எழுவகைப் பிறப்பில் பலவகை உடம்பினையும் கூறுவார் உழிதொறும் உழிதொறும் என்றார். கட்டு-கற்பித்தல். அஃதாவது முருகன் எனக்குப் பகையாய் வருக என்று கற்பித்தல் என்க. குதிரை முகமும் மக்கள் வடிவுமாகக் கற்பித்தலுடைய சூரன் எனினுமாம். உடல்-ஆகுபெயர்: உயிர் என்க. அவன் சென்ற கடலினுட் புகுந்து என்க. கல்.-6