|
யாக இங்கு வந்துள்ளீர்
என்று; ஓர் பெரிது இன் வாய்மை-ஒரோஒ ஒரு மிகவும் இனிய முகமன் மொழியினை; வெற்பனில்
பெறினே-நம் பெருமான் கூற யாம் கேட்பதுண்டாயின் என்க.
(வி-ம்.) மறைவழி
ஒழுகா மன்னவன் என்றதனால் கொடுங்கோல் மன்னவன் என்பது பெற்றாம். அம்மன்னவன்
நாட்டின்கண் பாவம் பெருகி அந்நாட்டின் புகழையெல்லாம் ஒருசேர மறைந்தாற்போல உலகத்துப்
பொருள்களையெல்லாம் ஒரு சேர மறைத்த இருள் என்க. போந்தனிர்-வந்தீர். அங்ஙனம்
தலைவன் வியந்து நம்மை வரவேற்கும் மொழிநமக்கு மிகவும் இனியதாய் இருக்கும் என்பாள்
பெரிது இன் வாய்மை என்றாள். பெறுதலும் அரிதென்பாள் பெறினே என்றாள்.
இனி, இச் செய்யுளை
மிடற்றேனும் பெருமானும் ஆகிய இறைவனுடைய திருவடி நினையாதார் நெஞ்சினும் இருண்ட இவ்வல்லிரவில்
யாம் அவன் இருக்கு மிடமத்திற்குச் செல்லவும் உரியம். யாம் அங்ஙனம் சென்றுழி நம்மால்
எதிர்ப்பட்ட அவ்வெற்பன் நீயிர் நடுநாள் அரிதிற் போந்தனிர் என்று கூறும் ஒரு மொழியை
யாம் பெறுவதுண்டாயின்; அங்ஙனம் பெறுதலும் அரிது. ஆகலின் செல்லா தொழிவோம் எனத்
தலைவி செலவு நினைந்துரைத்துக் குறிப்பால் வரைவு கடாவினான் என்க. மெய்ப்பாடும் பயனும்
அவை.
|