பக்கம் எண் :

மூலமும் உரையும்85



19: நாடு.....................................பெருமான்

     (இ-ள்) நாடு இரு முனிவர்க்கு-தன்னையே நாடுகின்ற பதஞ்சலி வியாக்கிரபாதர் என்னும் இரு முனிவர்களுக்காக. ஆடிய பெருமான்-திருக்கூத்தாடிய இறைவன் என்க.

     (வி-ம்.) முனிவர்-பதஞ்சலி, வியாக்கிரபாதர். மிடற்றோன் முன்னோர் நாளில் கலங்கவும், பெருக்கவும், உரப்பவும், தாக்கவும், இரட்டவும், ஒலிப்பவும், கறங்கவும், தாக்கவும் முனிவர்க்காக ஆடிய பெருமான் என இயைத்துக்கொள்க.

30-32: திருவடி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,தோழி

     (இ-ள்) திரு அடி வினவா கரு உறை மாக்கள் நெஞ்சினும்-திருவடிகளை நினையாமல் எய்திய பிறப்பினையுடைய மாக்களுடைய நெஞ்சத்துள் உஐயும் இருளைக்காட்டினும்; கடந்து நீண்ட வால் இரவில்-பெரிதும் இருண்டு நீண்ட வலிய இரவின்கண்; நில்லாது செல்லவும் உரியம்-முறைமையன்றாயினும் ஈண்டுத் தங்கி இராமல் யாமே நம் பெருமான் இருக்குமிடத்திற்குப் போதற்கும் உரியேம். தோழி-தோழீ கேள் என்க.

     (வி-ம்.) திருவடி நினையா என்றும் பாடம். கரு: ஆகுபெயர். பிறப்பென்க. நெஞ்சும் அது-நெஞ்சினிடத்தில் இருள் என்க.

33: எம்......................................எதிர்ப்பட்டு

     (இ-ள்) நம் பெருமான்; எம் எதிர்ப்பு இன்றி-ஈண்டு வந்து எம்மை எதிர்த்தல் அன்றி; இருந்து எதிர்ப்பட்டு-நாம் சென்று காண அவர் மனையிலேயே இருந்து நம்மால் எதிர்ப்பட்டுழி என்க.

     (வி-ம்.) எம் எதிர்ப்பின்றி என்றது தாமே வந்து நம்மை எதிர்த்தலே நேர்மையாகவும் அங்ஙனம் செய்யாமல் என்றவாறு. இருந்தெதிர்ப்படுதலாவது, நாம் அவர்பால் செல்லுங்கால் அவர் மனையில் அவர் இருந்து நம்மால் காணப்பட்டு என்றவாறு.

34-8: மறை...................................பெறினே

     (இ-ள்) மறைவழி ஒழுகா மன்னவன் வாழும்-மெய்நூல் விதித்த நெறியில் நின்று ஒழுகாத கொடுங்கோல் மன்னவன் வாழாநின்ற; பழி நாட்டு ஆர்ந்த பாவம் போல-பழியையுடைய நாட்டின்கண், நிரம்பிய பாவத்தைப் போல; சேரமறைத்த கூர் இருள் நடு நாள்-உலகத்துப் பொருள்களை யெல்லாம் ஒரு சேர மரைத்த மிக்க இருளையுடைய இவ்விடையாமத்திலே; அரிதிற் போந்தனிர் என்று-மிகவும் அருமை