|
(வி-ம்.) கயந்தலை-யானைக்கன்று.
மெல்லிய தலையையுடையது என்பது பொருள். கையினால் ஒலியைத் திரித்தலால் கைத்திரி
என்பது பெயராயிற்று. இதற்கு உடுக்கை என்றும் பெயருண்டு. செருநிலை-மாறுபட்டநிலை. இரட்டல்-ஒலித்தல்.
21-22:
இருதலை......................................ஒலிப்ப
(இ-ள்) இருடலை குவிந்த
நெடுஉடல் தண்ணுமை-இரண்டு தலையும் குவிந்துள்ள நீண்ட உடலினையுடைய தண்ணுமை என்னும் தோற்கருவி,
ஒருமுகம் தாழ்த்தி இருகடிப்பு ஒலிப்ப-ஒரு முகத்தைத் தாழ்த்தி இருகடிப்பு ஒலிப்ப-ஒரு
முகத்தைத் தாழச் செய்து உயர்ந்த மற்றொரு முகத்தின்கண் இரண்டு கடிப்புக்களால் ஒலித்தலால்
முழங்கா நிற்பவும் என்க.
(வி-ம்.) தண்ணுமை-மத்தள
வகையினுள் ஒன்று. இது நீண்ட உடலினையும் இருபக்கத்திலும் குவிந்த தலைகளையும் உடையது
என்பதும், இது ஒரு டலையில் இரண்டு கடிப்புக்களைக் கொண்டு தாக்கி முழக்கப்படும் என்பதும்
பெற்றாம். கடிப்பு-குறுந்தடி.
13-14:
திருமலர்......................................கரங்க
(இ-ள்) திருமலர்
எழுதிய-தாமரை மலர் வடிவ எழுதப்பட்ட, இருபத்தைந்து அங்குலி வரை இரண்டு இரண்டு அணைந்து-இருபத்தைந்து
அங்குலம் வரையில் இரண்டிரண்டு விரலாக அணைத்து; விளர் நிறீஇ-விளரிப்பண்ணை நிறுத்தி
மும்முகக்கயலுடன் மயிர்க்கயிறு கட்டப்பட்டுள்ளது இக்கருவி என்க. விளர்நிறீஇ-செவ்வேநிறுத்த
எனப்பழைய உரை கூறும். விளரி-நெய்தல்யாழ் எனினுமாம். இதற்கு விளரி ஈறு கெட்டு விளர்
என நின்றது என்க. இனி விளர்நிறீஇ என்பதற்கு வெள்ளை வண்ணம் பூசப்பட்டு எனினுமாம்.
28-29:
மரக்கால்...............................தாக்க
(இ-ள்) மரக்கால்
அன்ன-அளவு கருவியாகிய மரக்காலை ஒத்த; ஒருவாய்க் கோதை-ஒரு கடப்பறை! முகத்தினும்
தட்ட மூக்கினும் தாக்க-தன் முகத்திற் தட்டுதலாலும் மூக்கில் தாக்குதலாலும் முழங்கா
நிற்பவும் என்க.
(வி-ம்.) மரக்கால்-நெல்முதலியன
அளக்கும் கருவி. ஒரு வாய்க்கோதை-ஒருகடப்பறை,
|