|
11-34: ஒரு....................................பெருக்க
(இ-ள்) பெருவாய்
ஒரு முகம் படகம்-பரந்த வாயினையும் ஒரே முகத்தினையுடைய படகம் என்னும் தோற் கருவி;
ஒரு விரல் தெரித்தும்-தன்னிடத்தே ஒரு விரலைக் கொண்டு புடைத்தும்; ஐவிரல் குவித்தும்-ஐந்து
விரல்களையும் சேர்த்துப் புடைத்தும் முழக்குதலாலே; பெருக்க-முழக்கத்தைப் பெருகப் பண்ணவும்
என்க.
(வி-ம்.) படகம்-ஒருவகைத்
தோற்கருவி. இதனை முழக்குவோர் ஒற்றை விரலால் தெரித்தும் ஐந்து விரல்களையும் கூட்டிப்
புடைத்தும் முழக்குவர் என்பது பெற்றாம். தெரித்தும் குவித்தும் என்பன ஏதுப் பொருட்டாயின.
15-16:
தடா.................................உரப்ப
(இ-ள்) தடா உடல்
உம்பர்-தனது பெரிய உடலின்ல்; தலைபெறும் முழவம்-தலையினைப் பெற்ற முழவம் என்னும்
தோற்கருவி; நால் முகம் நடுமுகம் தட்டி உரப்ப-தன் நான்கு முகங்களிலும் நடுமுகத்தினும்
தட்டுதலாலே முழங்கா நிற்பவும் என்க.
(வி-ம்.) இதனால்
முழவம் என்னும் தோற்கருவி உச்சியிலே ஐந்து முகங்கலை உடையது என்பதும் அதனை முழக்குவோர்
அவ்வைந்து முகங்களிலும் மாறிமாறிப் புடைத்து முழக்குவர் என்பதும் பெற்றாம். தட என்னும்
உரிச்சொல் தடா என நின்றது. தட்டி-தட்ட. உரப்புதல்-ஒலித்தல்.
17-18:
ஒருவாய்.................................தாக்க
(இ-ள்) ஒருவாய் திறந்து
உள் கடிப்பு உடல் சல்லரி-ஓரிடத்தைத் திரந்து குமிழினை உள்ளேகட்டிய உடலினையுடைய
சல்லரி என்னும் கருவி. அங்கை தலை விரல் தாக்க-உள்ளங்கையாலும் நுனிவிரலாலும் தாக்கப்பட்டு
முழங்கா நிற்பவும் என்க.
(வி-ம்.) வாய்-இடம்.
கடிப்பு-குமிழ். விசித்தல்-கட்டுதல். சல்லரி-ஓர் இசைக்கருவி. இதனை உள்ளங்கையாலும்
நுனிவிரல்களாலும் தாக்கி முழக்குவர் என்பது பெற்றாம். முழங்கவும் என ஒரு சொல் வருவித்துக்
கொள்க.
19-20:
கயந்தலை..........................................இரட்ட
(இ-ள்) கயந்தலை
அடி என கயிறு அமை கைத்திரி-யானைக்கன்றின் அடிபோன்று பரந்த கண்களையுடைய கயிறுகள்
அமைந்த துடி என்னும் தோற்கருவி; இருவிரல் உயர்த்தி செருநிலை இரட்ட-இரண்டு விரல்களை
உயர்த்தி மாறுபட முழக்குதலாலே முழங்கா நிற்ப என்க.
|