பக்கம் எண் :

மூலமும் உரையும்89



  நவமணி யெடுத்து நற்புலங் காட்டலின்
15
  வளர்குறி மயங்கா வணிக னாகியும்
விழைதரு முழவும் வித்து நாறுந்
தழைதலின் வேளாண் டவலை னாகியும்
விரிதிரை வையைத் திருநதி சூழ்ந்த
மதுரையம் பதிநிறை மைம்மலர்க் களத்த
20
  னிணையடி வழுத்தா ரணைதொழி லென்னக்
கைதையெங் கரைசெய் பொய்தற் பாவையோ
டிருந்திரை யெடுக்கப் பொருதிரை யெடுத்தும்
பூழிப் போனகம் புதுவுட ணுண்டுஞ்
சாய்தாட் பிள்ளை தந்து கொடுத்து
25
  முடவுடற் கைதை மடன்முறித் திட்டும்
கவைதுகிர்ப் பாவை கண்ணி சூட்ட
குவலயத் திருமலர் கொணர்ந்து கொடுத்து
நின்றா னுண்டொரு காளை
யென்றா லித்தொழில் செய்வது புகழே.

(உரை)
கைகோள்: களவு. தலைவி கூற்று.

துறை: அரத்தொடுநிற்றல்

     (இ-ள்) இதற்கு “வரைவிடை வைத்த’ எனவரும் (தொல். கல. 21) நூற்பாவின்காண் உரையெனத் தோழிக்குரைத்தற்கண்ணும் தானே கூறுங் காலமுளவே என்னும் விதிகொள்க.

1-2: தன்னுழை................................ஆகியும்

     (இ-ள்) தன் உழை பலஉயிர் தனித்தனி படைத்து-தன்னிடத்தே பலவேறு உயிர்னங்களையும் தனித்தனியே படைத்து; பரப்பிக்காட்டலில் பதுமன் ஆகியும்-தன் பரப்பெல்லாம் பரவச்செய்து காட்டுதலால் படைப்புக்கடவுளாகிய மலரோனை ஒத்தும் என்க.

     (வி-ம்.) இதுமுதல் 18 ஆம் அடிவரையில் வையை நதியின் வருணனை. அந்நதி தனக்குள்ளே மீன்முதலிய நீர்வாழ்வனவாகிய உயிர்களைப் படைத்து யாண்டும் பரப்புதலால் மலரோனை ஒத்துளது என்க. பதுமன்-தாமரைமலரில் உறையும் பிரமன், இனி உலகிலுள்ள ஏனைய உயிர்களையும் நீரே உண்டாக்குதலின் பதுமனாகியும் என்னும் உவமை நன்கு பொருந்துதல் உணர்க.