|
உண்டு விளையாடியும்;
தாள்சாய்ப் பிள்ளை தந்து கொடுத்தும்-கால்களையுடைய கோரைப் பாவையைச் செய்து கொணர்ந்து
எனக்கு வழங்கியும்; முடவுடல் கைதை மடல் முறித்து இட்டும்-வளைந்த உடலினையுடைய தாழை
மலரைக் கொய்து கொணர்ந்து கொடுத்தும் என்க.
(வி-ம்.) பூமி-புழுதி.
போனகம்-உணவு. புதுமையுடன் எனல் வேண்டிய மௌவிகுதி கெட்டது. சாய்-கோரை. கோரையாற்
செய்த பிள்ளை என்றது பாவையை. மடல்-மலர்.
26-27:
கவை............................கொடுத்தும்
(இ-ள்) கவை துகிர்ப்பாவை
கண்ணி சூட்ட-கவையினையுடைய நம்பவளப் பாவைக்கு மாலைசூட்டற் பொருட்டு; குவலயத் திருமலர்
கொணர்ந்து கொடுத்தும்-குவலையாகிய அழகிய மலர்களைக் கொணர்ந்து வழங்கியும் என்க.
(வி-ம்.) துகிர்ப்பாவை-பவளப்பாவை.
குவலயமலர்-குவளை மலர்.
28-29:
நின்றான்......................................புகழே
(இ-ள்) நின்றான்
ஒருகாளை உண்டு-நம்மோடு விளையாடி நின்றவன் ஒருகாளை உளன் அல்லனோ; என்றால் இத்தொழில்
செய்வது புகழே-என்று கருதுமிடத்து இவ்வாறு என் பொருட்டு வெறியாடுதல் நங்குடிக்குப் புகழாகுமோ?
ஆகாதன்றே; ஆதலாலினி உனக்குத் தக்கதனை நீ செய்வாயாக என்க.
(வி-ம்.)
என்னைத் திரையினின்று எடுத்தும் நம்மோடு பீனகம் உண்டும் பாவை கொடுத்தும் மடல்
முறித்திட்டும் சூட்ட மலர்கொடுத்தும் விளையாடி நின்றான் ஒருகாளை உண்டென்றால் இத்தொழில்
புகழாகுமோ? என இயைபு காண்க. எனவேஅந்தக் காளைக்கு யான் கற்புக்கடம் பூண்ட செய்தியை
இனி நீ நமர்க்கு அறிவுறுத்தி மேலே செயவேண்டியவற்றைச் செய்வாயாக என்பது குறிப்புப்பொருள்.
மைமலர்க்களத்தன் இணையடி வழுத்தாக் கீழ்மக்கள் செய்யுந் தொழில்போல, (வெறியாடலாகிய)
இத்தொழில் செய்வது நமக்குப் புகழாகுமா? என இயையும். மெய்ப்பாடும் பயனும் அவை.
|