பக்கம் எண் :

96கல்லாடம்[செய்யுள்10]



  வீதிவந் ததுவர லானம்
மேதந் தீர விருமருங் கெழுந்தே.

(உரை)
கைகோள், கற்பு, பரத்தையர்க்குப் பாங்காயினார் கூற்று

துறை: தேர்வரவு கண்டு மகிழ்ந்து கூறல்

     (இ-ள்) இதனைப் ‘புல்லுதல் மயக்கும்’ (தொல். கள. 24) என்னும் நூற்பாவின்கண் பிறவும் என்பதனால் அமைத்துக் கொள்க.

14-16: வெண்சுடர்.......................................பெருமான்

     (இ-ள்) வெண்சுடர் செஞ்சுடர் ஆகிய விண்ணொடு-திங்களும் ஞாயிறும் அச்சுடர்கள் தோன்றுதற் கிடனான வெளியும்; புவி புனல் அனல் கால்மதிபுலவோன் என-நிலமும் நீரும் காற்றும் மதிக்கும் உயிரும் என்று கூறும்படி; முழுதும் கண் நிறைந்த முக்கண் பெருமான்-யாண்டும் நிறைந்த மூன்று கண்களையுடைய சிவபெருமான் என்க.

     (வி-ம்.) வெண்சுடர்-திங்கள். செஞ்சுடர்-ஞாயிறு. வெண்சுடரும் இவை உண்டாக்கிய விண்ணும் என்க. ஒடு எண்ணின்கண் வந்தது. கால்-காற்று. மதிப்புலவோன்-மதிக்கும் அறிவினையுடைய உயிர் என்க. இவற்றை இறைவனுடைய எண் வகை வடிவங்கள் என்ப. இதனை,

“நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலவனாயமைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்
உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ” (திருத்தோ. 2)

எனவரும் திருவாசகத்தானும் உணர்க. இவ்வெண்வகைப் பொருள்களுள் உயிர் தனிச்சிறப்புடையது என்பது தோன்ற மதிபுலவோன் என்று வியந்தார். மதிபுலவோன்: வினைத்தொகை.

17-18: பனி................................அந்நாள்

     (இ-ள்) பனிக்கதிர் குலவன் பயந்து அருள் பாவையை-திங்கட் குலத்தோனாகிய மலையத்துவச பாண்டியன் ஈன்றருளிய கொல்லிப் பாவையை ஒத்த தடாதகைப் பிராட்டியாரை; திருபெருவதுவை பொருந்திய அந்நாள்-அழகிய பெரிய மணச்சடங்கு வாயிலாகப் பொருந்திய அந்த நாளிலே என்க.

     (வி-ம்.) பனிக்கதிர்: அன்மொழித் தொகை. குளிர்ந்த கதிர்களையுடைய திங்கள் என்க. புலத்தையுடையவனைப் புலவன் என்றாற் போலக் குலத்தையுடையவனைக் குலவன் என்றார்; என்றது மலயத்து