பக்கம் எண் :

மூலமும் உரையும்99



என்பதனை; கண்ணிடைக் காண்மின் உளத்திடைக் கருதுமின்-இப்பெருமான் நம்பால் வருதலின் அத்தவத்தின் காரியத்தை நுங்கள் கண்ணாலே காணுங்கள்! நெஞ்சத்தினும் நினைந்து நினைந்து மகிழ்வீராக! அன்றியும்; பூவும் சுண்ணமும் புகழ்ந்து எதிர் எறிமின்-மலர்களையும் பொற்சுண்ணங்களையும் இந்நம்பியின் புகழ்பாடி அவனெதிரே தூவுவீராக! அன்றியும்; யாழில் பரவுமின்-யாழ் இசையோடே இவன் புகழைப் பாடி வாழ்த்துவீராக; ஈங்கு இவை அன்றி-இங்கு இவற்றைச் செய்தலோடன்றி; கலத்தும் என்று எழுமின்-இந்நம்பியை யாம் கூடுவோம் என்று துணிந்து எழுவீராக; கண் அளிகாண்மின்-அங்ஙனங் கூடுங்கால் அவனுடைய கண்ணின்கண் மெய்ப்பாடாகத் தோன்றும் அருளினும் அழுந்தி மகிழ்வீராக என்க.

     (வி-ம்.) பெருங்கவின்-பேரழகு. முற்பிறப்பில் தவம் செய்தார்க்கன்றி இத்தகைய பேறு எய்த மாட்டாது; இப்போது நமக்கு எய்தியதனாலேயே யாம் பண்டு அருந்தவம் செய்துள்ளோம் என்பது விளங்குகின்றது; என்பாள் முன்னாள் செய்த அருந்தவத்தை உளத்திடைக் கருதுமின் என்றாள். அத்தவத்தின் பயனாக நம்மெதிரே வருகின்ற நம்பியையும் கண்கூடாகக் காண்மின் என்பாள் கண்ணிடைக் காண்மின் என்றாள். பேணிய-பேணுதற்குக் காரணமான. எறிமின்-தூவுக. யாழ்-யாழிசை. கலத்தும்-கூடுவோம். கண்ணளி-கண்ணின்கட் தோன்றும் அருள். இனி முக்கட்பெருமானும் குணப்பெருங்கடவுளுமாகிய இறைவனுடைய சேவடியைத் தரித்த உள்ளத்தையுடைய ஊரனுடைய தேர் உதோ நம்விதி வந்தது வரலால் நம் ஏதம்தீர இருமருங்கும் எழுந்து தொழுதல் முதலியன செய்து அவனுடைய அளிகாண்மின் என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.