பக்கம் எண் :

98கல்லாடம்[செய்யுள்10]



பண்புத்தொகை. இணர்-பூங்கொத்து. தாமம்-மாலை. ஏதம்-அவன் இதுகாறும் நம்பால் வாராதிருந்தற்குக் காரணமான நங்குற்றம் என்க.

1-4: வடி...............................தரிமின்

     (இ-ள்) வடிவிழி சிற்றிடை பெருமுலை மடவீர்-மாவடுவின் பிளவுபோன்ற கண்களையும் சிறிய இடையினையும் பெரிய கொங்கைகளையுமுடைய மடந்தையீர்; தொழுமின் வணங்குமின் சூழ்மின் தொடர்மின்-அத்தேரினைக் கைகுவித்துத் தொழுவீராக! அன்றியும் அப்பெருமானைத் தலையால் வணங்குவீராக! அன்றியும் அத்தேரினை வலம் வருவீராக! அன்றியும் அதனைத் தொடர்ந்து செல்வீராக! கடிமலர் கோதை அன்பொடு கட்டுதிர்-அன்றியும் மணம்மிக்க மலர்மாலைகளைக் காதலோடு முடிவீராக!; முகையின்முலை முகம் முண்டகம் தரிமின்-அரும்பு போன்ற நும்முலை முகத்திலே தாமரை மலரினை அணிந்து கொள்வீராக! என்க.

     (வி-ம்.) வடி-மாவடு. சிற்றிடைப் பெருமுலை என்புழிச் செய்யுளின்ப முணர்க. தொழுதல்-கைக்குவித்துக் கும்பிடுதல்; வனங்குதல். தலைவணங்கி நிற்றல். “தலையே நீவணங்காய்” எனவரும் அப்பர் திருவாக்காலும் உணர்க. இனி, கடிமலர் தோகை கட்டுதிர் அதனை அன்போடு முண்டக முகைபோன்ற நும் முலைமுகம் தரிமின் எனினுமாம்.

5-8: உருளின்...................................உறுமின்

     (இ-ள்) உருளின் பூழி உள்ளூற ஆடுமின்-நம்பெருமானுடைய தேர் உருளையின் துகளை நும் உடலில் பொருந்த ஏற்றுக் கொள்வீராக!; எதிர்மின் இறைஞ்சுமின் ஏத்துமின் இயங்குமின்-அன்றியுமவனை நீவிர் எதிர்கொள்வீராக! அன்றியும் அவன் அடிகளில் வீழ்ந்து தொழுமின்! அன்றியும் அவனைப் புகழ்வீராக! இன்னும் அவனை அணுகிச் செல்வீராக! அன்றியும்; கருப்புரம் துதைந்தகல் உயர்மணித் தோள்வசம் படரும் மருந்தினும் உறுமின்-கருப்பூரம் பூசப்பட்ட மலையினும் உயர்ந்த அவனுடைய அழகிய தோளினது நறுமணத்தோடு வருகின்ற காற்றினூடும் பொருந்துவீராக! என்க.

     (வி-ம்.) உருளிற்பூழி-தேருருளையில் எழுகின்ற துகள். கருப்புரம்- கற்பூரம். கல்-மலை. மணி-அழகு, மருந்து-காற்று.

9-13: பெருங்கவின்.............................................கண்மின்

     (இ-ள்) முன்னாள் பெருங்கவின் பேணிய-முற்பிறப்பிலே இந்த நம்பியினுடைய பேரழகினை யாம் போற்றி நுகர்தற்கு அருந்தவம்-யாம் செயற்கரிய நோன்பினைச் செய்துள்ளோம்