| 85 | தான்ஆ காமையைச் சாற்றிடும் என்க தாமே எனும்இத் தனிஏ காரம் அழிந்திலர் அதுவே ஆய்த்திலர் அதுவிட்டு ஒழிந்திலர் பிறிவிலர் எனும்இவை உணர்த்தும் காயும் பழமும் சுவையும் நுகர்வ | 90 | தாயவன் தானும் அவன்முதற் றென்னும் அகிலமுந் தெளிய அறிவோன் தானும் அகிலமும் அறிஞரை அறிவிப் போனும் அறிஞர்க் கறிவாய் அறிகின் றோனும் அறிவிற் கறிபொருள் ஆவோன் தானும் அகிலமும் மேனி யானவன் என்னும் | இப்படி ஆனாய் ஆனாய் என்று சொல்லப்பட்டதெல்லாம் அந்தச் சிவன்தான் அந்த வானும் மண்ணுமாகா னென்பதனைச் சொல்லியிடுமென் றறிக; தாமே யெனும்இத் தனியேகாரம் - தாமேதாமாய்ச் செய்யுமென்கிற ஒப்பில்லாத ஏகாரத்தோடுங் கூடிக்கொண்டிருக்கிற திருவாக்கு; அழிந்திலர் அதுவே யாய்த்திலர் அதுவிட்டு ஒழிந்திலர் பிறிவிலர் எனும் இவை உணர்த்தும் - தாங்கள் அழிந்தார்களுமில்லை அந்தச் சிவமுதலானார்களுமில்லை, அந்தச் சிவமுதலையின்றிக் காரியப்பட்டார்களுமில்லை, அந்தச் சிவமுதலுக்கு வேறாயிருந்தார்களு மில்லையென்று இப்படியிருக்கும் சொல்லு; காயும் பழமும் சுவையும் நுகர்வதாயவன்தானும் அவன் முதற்று என்னும் - [அப்பர்; 6. 94. 5] 'காயாகிப் பழமாகிப் பழத்துள்நின்ற இரதங்கள் நுகர்வானுந் தானேயாகிழு என்ற திருவாக்குக் காயும் அவனாலே உண்டானது, பழமும் அவனாலே உண்டானது, பழத்தின் இரதமும் அவனாலே உண்டானது, அந்த இரதங்களை நுகர்வானும் அவனாலே உண்டானது, ஆகையாலே அவையெல்லாஞ் சிவன் முதலாக உண்டானதென்று சொல்லும் அகிலமும் தெளிய அறிவோன்தானும் அகிலமும் அறிஞரை அறிவிப்போனும் அறிஞர்க்கு அறிவாய் அறிகின் றோனும் அறிவிற்கு அறி பொருளாவோன் தானும் அகிலமும் மேனியானவன் என்னும் - எல்லாவற்றையும் மயக்கமற அறிவானாயுள்ளவனும், அறியும் பகுதியுள்ளவர்களுக்கு எல்லாவற்றையும் அறிவிப்பவனா யுள்ளவனும், அறியும் பகுதியை யுள்ளவர்களுக்கு அவர்களுடைய அறிவாய் நின்று அறியும் |