பக்கம் எண் :

11. சிவசமவாதி சங்கற்பம்1265


தருபொருள் கொள்பொருள் தருவோன் கொள்வோன்
ஒருபொருள ளாயின் 1உவப்புண் டென்க
நுகர்வோன் தனக்கு நுகர்பொருள் வேண்டில்
95 இலகறக் கிடையா தொழிந்ததென் நிரயமும்
வேண்டா ராயினும் மெய்யுறு வியாதிகள்
ஈண்டா தொழியா திறைக்கிவை ஈடல
சத்தியுஞ் சிவமும் தாமே நுகரும்என்று

பகுதியை யுடையவனும், அறிகிறவர்களுடைய அறிவிற்கு அறியப்படும்
பொருளாயுள்ளானும் என்ற திருவாக்கு சர்வத்தையுஞ் சிவன் திருமேனியாக
உடையவனென்று சொன்னதாயிருக்கும்; தருபொருள் கொள்பொருள்
தருவோன் கொள்வோன் ஒருபொருளாயின் உவப்பு உண்டென்க - ஒருவன்
கொடுக்கப்பட்ட பொருள், தான் கொள்ளப்பட்ட பொருள், ஒரு பொருளைக்
கொடுக்கிறவன், அந்தப் பொருளைக் கொள்ளப்பட்டவன் இவையெல்லாம்
ஒரு பொருளாயிருக்குமாயின் மிகவும் பிரியம் வருமென்க. இப்படியுஞ்
சொல்லுவார்களோ; நுகர்வோன் தனக்கு நுகர்பொருள் வேண்டில்
இகலறக் கிடையாது ஒழிந்ததென் நிரயமும் - பொசிப்பானொருவனுக்கு
ஒருபொருளைப் பொசிக்க வேண்டினவிடத்து அந்தப்பொருள் அவனுக்கு
மாறுபாடின்றி வந்து கூடுவதில்லை. எல்லாப் பொருளும் ஒரு பொருளா
யிருக்குமாயின் அவன் நினைத்தபொழுதே பொசிக்கவேண்டாமோ? அது
கண்டடோமில்லை. ஆகையால்எல்லாம் ஒன்றாயிருக்குமாயின் நரகதுக்
கமுண்டாகாது. அதேதென்னில்; வேண்டாராயினும் மெய்யுறு வியாதிகள்
ஈண்டா தொழியாது-குன்மம் சூலைமுதலாயின வியாதிகளை அனுபவிக்க
வேண்டா என்றிருப்பர்கள் இருந்தாலும் சரீரத்திலே உண்டாகப்பட்டிருக்கிற
வியாதிகள் இவர்களை வந்து பொருந்தி அனுபவியாமல் விடாது. ஆகையால்
நீ எல்லாம் ஒன்றென்று சொன்னது அர்த்தமன்று. ஆன்மா இல்லை
எல்லாஞ்சிவமே அனுபவிக்கிறதென்றாய்; இறைக்கு இவை ஈடல - வேண்டின
பொருள் கிட்டாமலும் வேண்டாத வியாதிகள் வந்துகிட்டியும் இவையிற்றினால்
உண்டாகியவருத்தம் ஆன்மாவுக்கொழிந்து கர்த்தா வாக்குமனாதீதகோசரமா
யிருக்கையினாலே அவனுக்கு உண்டாகாது. இப்படி இருக்கச்செய்தே; சத்தியுஞ்
சிவமுந் தாமே நுகரு


     1. உவப்பின் றென்க - பாடபேதம்.