100 | இத்திறன் உணர்வுவந் தெய்துவ தெவர்க்கே தமக்கே என்னில் தாம்உண ராமையும் அமைப்பற உணர்தலும் அவர்க்கடை வன்றே | 105 | நானும் அவனும் நவையும் நலனும் தான்அவன் ஆகையும் நின்சா தனத்தில் சகயோ கத்தைச் சாயுச்சி யம்எனப் பகர்வது பதிபசு பாசத் தவர்க்கே யாதொரு வகையென ஓதிய திறைநூல் | மென்று இத்திறன் உணர்வு வந்து எய்துவது எவர்க்கே - ஆன்மாஇல்லை, சத்தி சிவங்கள் எல்லாச் சுகதுக்கங்களையும் அனுபவிக்கு மென்று நீ சொன்ன இந்தப் பகுதியிலுண்டாகிய ஞானம் இந்தப் பிரபஞ்சத்துக்குள்ளே ஆர்க்குத் தான் வந்துண்டாவது? என்றது ஆக்ஷேபம்; தமக்கே என்னில்தாம் உணராமையும் அமைப்பற உணர்தலும் அவர்க்கு அடைவன்றே - சத்தி சிவங்களுக்கேஇந்த அனுபோக மென்னில், அந்தச் சத்தி சிவங்கள் இந்தப் பிரபஞ்சத்தை அறியாதபடியாலும் அறியுமிடத்துச் சுட்டியறியாமல் தடையற எல்லாவற்றையும் ஒக்க அறிகையினாலும் இந்தச் சுகதுக்கங்களால் உண்டாகிய அனுபோகம் ஆன்மாவுக்கொழிந்து அந்தச் சத்தி சிவங்களுக்கு உண்டாவ தொன்றல்ல. இது பெத்தத்தை மறுத்தது. மேல் முத்தியை மறுக்கிறான்: நான் ஒருமுதல் அவன் ஒருமுதலென்று நிற்கிற இது குற்றத்தையுடைய வழியென்றும் இவன் அவனாய் விடுகிற இது சாயுச்சியமாகிய நல்வழியென்றுஞ் சொன்னாய்; நானும் அவனும் நவையும் நலனும் தான் அவனாகையும் நின் சாதனத்து இல்-நானென்கிற ஆன்மாவும், அவன் என்கிற சிவனும், நவையென்கிற குற்றமும், நலனென்கிற நன்மையும், இந்த ஆன்மா அந்தச் சிவனாக வேணுமென்கையும் நீ எல்லாம் ஒன்று என்கிறவனாகையால் உன்னுடைய சாதனத்துக்குட்பட்டதல்ல. இதன்றியும்; சகயோகத்தைச் சாயுச்சியம்எனப் பகர்வது பதிபசுபாசத்தவர்க்கே - யோக மார்க்கத்துக் குண்டான முறைமையை நீ சாயுச்சிய மார்க்கமாகச் சொல்லுகிற இது திரிபதார்த்த நிண்ணயம் வந்தவர்கள் கொள்ளும் பகுதியாமே ! இதன்றி; யாதொரு வகையென ஓதியது இறைநூல் சொன்னவற்று ஒன்றுன்று - இந்த முத்தித் தன்மை கூடு |