பக்கம் எண் :

11. சிவசமவாதி சங்கற்பம்1267


சொன்னவற் றொன் றன் றென்னில்வீ டெளிதே
தான்அறி வழியே தலைப்பொருள் பிடிக்கின்
மேல்நிகழ் பலமும் வீடளித் திடுமே
110 நிலையாக் கருவியை நிலையாக் கருதிப்
புலையா டுதலும் உலகா யதன்பொருள்
குட்டியம் இன்றிநற் கோலம் எழுதுதல்
இட்டம தாயிற் கருவியும் இடங்களும்
கருத்துற உரைக்கத் தெரித்திடும் மதித்தது

மளவும் மக்களொக்கல் சமுசாரத்தோடுங் கூடித்தான் இருப்பான், இவையிற்றை
விட்டுத்தானிருப்பான், நின்றதே நிலையாகக் கொண்டு சாதித்து வரக்கடவ
னென்று நீ சொன்னது, சிவாகமம் மோக்ஷத்துக் கேதுவாயுள்ளவர்கள்
சரிக்கவேண்டின முறைமை பலவழியுஞ்சொல்லும் அவையிற்றில்ஒருவழிக்
குட்பட்டதல்ல; என்னில் வீடு எளிதே - அப்படிச் சரிக்கிறதுதான் காணும்
முத்தி சாதனமென்னில், மோக்ஷத்தை அரிதென்று சொல்லவேண்டுவதில்லை,
எல்லார்க்கும் எளிதாகப் பெற்றுவிடாலமென்று சொல்லு. இதன்றியும்; தான்
அறி வழியே தலைப்பொருள் பிடிக்கின் மேல் நிகழ் பலமும் வீடளித்திடுமே
- ஒரு ஆசாரியன் நல்லவழி கற்பிக்க அந்த வழியே ஒழுகிவாராமல்
தன்னுடைய போதத்துக்குத் தோன்றின வழியே தலையான பொருளாகப்
பிடித்து அந்த வழியே ஒழுகிவர அதனால் உண்டாய பலமும் வீட்டின்
பத்தைத் தருமே; நிலையாக் கருவியை நிலையாக் கருதிப்புலையாடுதலும்
உலகாயதன் பொருள் - நிலை நில்லாமைக்குச் சாக்ஷியாயுள்ள தேகாதிப்
பிரபஞ்சத்தை நிலைநிற்குமென்று கருதிச் செய்யாக் காரியத்தைச் செய்து
கொண்டு வருகிறது உலகாயதன் கொள்ளும் பொருளா மொழிந்து சைவரா
யுள்ளவர்கள் கொள்ளும் பொருளல்ல; குட்டியமின்றி நற்கோல் மெழுதுதல்
இட்டம தாயின் - சுவரில்லாமற் சித்திர மெழுதுகிறது ஒருவருஞ் செய்ய
வொண்ணாதது, உனக்கு இட்டமாயிருக்குமாயின்; கருவியும் இடங்களுங்
கருத்துற உரைக்க - தனுவுங் கரணமும் புவனமும் போகமும் ஆன்மாவுக்கே
யென்று சாத்திரஞ் சொல்லச்செய்தே; தெரித்திடும் மதித்தது - மதித்து
தெரித்திடும் என மாறுக இதன் பொருள் ; சிவன் விசுவாதீதனா
யிருக்கையினாலே அவனுக்கு இவை வேண்டுவதில்லை, இவை வேண்டினது
ஆன்மா