பக்கம் எண் :

1268சித்தாந்த சாத்திரம் - சங்கற்பநிராகரணம்

115 அறிவொன் றில்லோர்க் கிறையருள் உதவுதல்
பிறிவறி வரிய செறிஇருள் இடத்தோர்
அந்தகர்க் காண வந்தோர் எம்மை
நீவிரும் காண வேணும் என்றாங்கு
எடுத்தொரு தீபம் கொடுத்ததை ஒக்கும்
120 இச்செயற் கிறைவன் கொச்சையன் அன்றே
கருவி வசத்தில் தெரிவுறக் காண
வேண்டுநர் இலரால் ஈண்டறிவு யாவுஞ்
சிவமே என்று செப்பினை அவம்உறு

வுக்கா யிருக்கச்செய்தே, ஆன்மா இல்லை இவை அந்தரத்தே நிற்குமென்று
உன்னுடைய போதம் சற்றும் கூசாமல் நினைத்துச் சொல்லும். இதன்றி;
அறிவொன்றில்லோர்க்கு இறையருள் உதவுதல்-ஓர் ஏகதேசமும் அறிவில்லாத
ஆன்மாக்களுக்குக் கர்த்தாவினுடைய அருள் அறிவைக் கொடுக்குமென்றாய்,
அங்ஙனம் அது செய்தல்; பிறிவறிவரிய செறியிருளிடத்து ஓர் அந்தகர்க்
காணவந்தோர் எம்மை நீ விருங் காணவேணும் என்றாங்கு எடுத்து ஒரு
தீபம் கொடுத்ததை ஒக்கும் - ஒரு சற்றும் நீக்கிக் காணவொண்ணாமற்
செறிந்துகொண்டிருக்கிற இருளினிடத்திலேயிருக்கிற அந்தகராயுள்ளவரைக்
காணவந்தவ ரொருவர் விளக்கைக் கொண்டுவத்து கண்டு அந்த விளக்கை
அந்தகர் கையிலே கொடுத்து என்னையும் நீர் காணவேணுமென்று சொல்ல,
அவரை இவர் கண்டாரென்கிறதற்கொக்கும் அறிவில்லாத ஆன்மாவுக்கு
அருள் அறிவைக் கொடுக்க அறிந்ததென்று நீர் சொன்னது; இச் செயற்கு
இறைவன் கொச்சையனன்றே - அறிவில்லாத ஆன்மாவுக்குத் தன்னுடைய
அருளைக்கொண்டு அறிவைக் கொடுத்தான் என்கிறது கர்த்தாவும் இந்த
ஆன்மாவைப்போல அறிவில்லாதவனாக வேண்டும், இதன்றியும்; கருவி
வசத்தில் தெரிவுறக் காணவேண்டுநர் இலரால் - கருவிகள் சடமா யிருந்த
படியாலே இவையிற்றைக் கொண்டு தேகாதிப் பிரபஞ்சத்தை நன்றாகக்
காண்கிற காட்சி சிவஞானிகளா யுள்ளவர்களுக்குள் ஒருவரும் வேண்டி
யிருப்பார் இல்லை. அப்படியிருக்கச்செய்தே; ஈண்டு அறிவு யாவுஞ் சிவமே
யென்று செப்பினை - இவ்விடத்துக் கருவிகளைக் கொண்டு தேகாதிப்
பிரபஞ்சத்தை அறிந்துவருகிற அறிவெல்லாஞ் சிவமேயென்று நீ சொன்னாய்;