125 | பொறிபுலன் அறியா அறிவது பிரமம் என்றோர்க் குன்போல் இடர்ப்படல் இலதே ஏற்றம் கருவி இருபதோ டிரண்டும் போற்றும்ஓர் அவத்தையும் புகல்திரி மலமும் ஈசனும் உயிரும் பேசினை அஃதொழிந்து ஒன்றே யாகும் என்ற நின்இயல்பு | | 130 | தாயர் மனைவியர் தாதியர் தவ்வையர் ஆயவர் எவரையும் ஓர்மையிற் காணும் கோகழி 1தூர்த்தர் கொடுந்தொழில் தகுமே | அவன் உறு பொறிபுலன் அறியா அறிவது பிரமம் என்றோர்க்கு உன் போல் இடர்ப்படல் இலதே-இந்திரியங்கள் தானாக விஷயங்களை அறியமாட்டாதது கொண்டு சடமாயிருந்தபடியாலே எல்லாவற்றையும் அறிகிறது பரப்பிரம மென்று சொன்ன மாயாவாதிக்கும் உன்னைப்போலக் குற்றஞ் சொல்லத் தக்கது இல்லை. அதேனென்னில், அவன் பிரமத்தை அறிவென்றும் பிரபஞ்சத்தைச் சடமென்றுஞ் சொன்னான், நீ எல்லாவற்றையுஞ் சித்தென் கையினாலே. இதன்றியும்; ஏற்றம் கருவி இருபதோடு இரண்டும் போற்றும் ஓர் அவத்தையும் புகல் திரிமலமும் ஈசனும் உயிரும் பேசினை - அந்த மாயாவாதி பதினாலு கருவியும் நாலவத்தையுஞ் சொன்னான். நீ அவனிலும் பார்க்க ஏற இருபத்திரண்டு கருவியுஞ் சைவராயுள்ளவர்கள் பரிகரித்துக் கொண்டு வருகிற ஓர் அவத்தையும் இவர்களாலே சொல்லப்பட்டு வருகிற மூன்றுமலமும் கர்த்தாவும் ஆன்மாவும் உண்டென்று சொன்னாய்; அஃது ஒழிந்து ஒன்றேயாகும் என்ற நின் இயல்பு - அவையிற்றை யெல்லாம்விட்டு இப்பொழுது எல்லாம் அந்தச் சிவமொன்றுமேயென்று நீ சொல்லுகிற இயல்பு எதற்கொக்கும் ; தாயர்மனைவியர் தாதியர் தவ்வையராயவர் எவரையும் ஓர்மையிற் காணுங்கோகழி தூர்த்தர் கொடுந்தொழில் தகுமே-தன்னுடைய தாய் சிறியதாய் பெரிய தாயானவர்கள், தன் பெண்சாதி தமையன் பெண் சாதி தம்பி பெண்சாதியா யுள்ளவர்கள், தன் வெள்ளாட்டிமுன் சொன்னவர் களுடைய வெள்ளாட்டியாயுள்ளவர்கள், தன்னுடைய தங்கைமார் தமக்கைமார் இங்ஙனஞ் சொல்லப்பட்டவர்க ளெல்லாரையந் தன்னுடைய பெண்சாதியைப் பார்க்குமாப்போலே இவர்களெல்லாரையும்
1. தூர்த்தக் - பாடபேதம். |