பக்கம் எண் :

624சித்தாந்த சாத்திரம்

யமையும் ஒருவாவொருவர்க் கிருவரும் வேண்டா - அப்படியன்று, இராசாவும்
இயமனுமாகிய இருவருந் துக்கசுகம் அருத்துவானேன் என்னின், கன்ம
நீங்காத எனக்கு ஒருவரமையாதோ இருவரும் வேண்டுவதில்லை; இறைவனும்
நின்றனை - இவ்விருவருமின்றி நீயு மொருவன் நின்றாய்; நின்னது கருணை
சொல்லளவின்றே - நீயே யவர்களையுங் கொண்டு செய்விக்கின்றாயாமாகில்
செய்விக்குங் காருண்ணியஞ் சொல்லுங்காலத்து அளவில்லையாம், அதெப்படி
யென்னின்; அமைத்தது துய்ப்பின் எமக்கணைவின்றாம் - உனக்குள்ளதை நீ
யனுபவிக்கிறா யென்கின்றா யாமாயின் அந்தக் கன்மம் எனக்குத் தானே
வந்து கூடமாட்டாது, கூடுமாயின் நீரெனக்குச் சுவாமியாக வேண்டுவதில்லை;
உள்ளது போகாது இல்லது வாராது உள்ளதே யுள்ளதெனு முரையதனால் -
அது வல்லது உள்ள துன்னாலும் நீக்க வொண்ணாது, இல்லாதது உன்னாலுங்
கூட்டவுமொண்ணாது, உள்ளதே உள்ளதெனுமாகையால்; கொள்ளும் வகையாற்
கொளுத்திடுமாயின் வள்ளன்மை யெல்லா முள்ளிட வமையும் - நீ
யவற்றுக்குச் செய்ததேதெனின் அவற்றைக் கூட்டும் வகையறிந்து
கூட்டினாயாயின் உன் பெருமையை நினைக்கப்போதும் அதுவுமன்றி; ஈய
வேண்டுமெனும் விதி யின்றாம் - நீ யிந்தக் கன்மங்களை யெனக்குச் செலுத்த
வேணுமென்கிற முறைமையுமில்லையாம்; ஆயினும் என்னை அருந்துயர்ப்
படுத்த நாயினேற்கு நன்று மன் - என் குறையாற் செய்கின்றாயாயின்
அடியேனைத் துயரத்திட்டுப் பார்த்திருப்பது உமது காருண்ணியத்துக்கு
மிகவும் நன்று ஆதலால்; மாயக் கருமமுங் கருமபந்தமுந் தெருளவருளுஞ்
சிவபெருமானே - அனாதியே கன்ம முண்டென்னின் அது கன்மமும் அது
வருகைக்கு முன்னமேயாகிய மாயையும் முன்பின் மயங்காமல் அருளிச்
செய்யவேண்டும் எனக்குச் சுவாமியாக வந்த சிவனே யென்றவாறு.

     இச்செய்யுள் கன்மங் கூட்டுமுறைமையை வினாயது; உத்தரம்:

செய்வான் வினையறியான் செய்தவினை தானறியா
எய்யா தவனாலும் எல்லையறச் - செய்தவினை1

     1. 'செய்தவினை தானறியா எங்கோனும்' என்பது ஏட்டில் கண்ட பாடம்.