எங்கோனுஞ் செய்தனவும் எவ்வெவர்க்கும் வெவ்வேறும் அங்கே யறிவான் அரன். 14 | | | மானமருஞ் செங்கை மதில்வெண்ணெய் வாழ்மன்ன போனவினை தானே பொருந்துமோ - யானதனில் ஆவனோ ஆக்காய் அமலனும் நின்னருள்தான் தேவனே யாதுக்கோ தேர். 15 | (உரை) மானமருஞ் செங்கை மதில் வெண்ணெய் வாழ் மன்ன போனவினை தானே பொருந்துமோ யான் அதனில் ஆவனோ ஆக்காய் அமலனாம் நின்னருள்தான் தேவனே யாதுக்கோ தேர் - மானை யேந்துகிற சிவந்த கரத்தையுடையவனே, மதில்சூழுந் திருவெண்ணெய்நல்லூரில் வாழுந் தலைவனே, யான் புசித்துத் தொலைந்த வினை மீண்டு பொருந்தியதோ, யான்சென்று அதனைக் கூடினேனோ, தேவரீரும் விகாரியாய்க் கூடுதலில்லையே, ஆதலால் [நின்மலராகிய உம்முடைய] அருள் யாது செய்வதாக நின்றது சுவாமியே விசாரித்தருளென்ற வாறு. எனவே வினை பொசிக்குமளவும் யானெனது விஞ்சுதலுண்டாய தெனவறிக. 15 | 5 | தேரா துரைப்பன் தெருமர லுளத்தொடு பேரா தருளுதல் பெரியோர் கடனே நின்னைக் கலப்ப தென்னுண் மையே நின்னது நேர்மை சொல்மனத் தின்றே எழுவகைத் தாதுவின் ஏழ்துளை யிரண்டும் | | 10 | பெருமுழைக் குரம்பையிற் பெய்தகத் தடக்கி நீக்கி யென்றனைப் போக்கற நிறுத்தி இச்சை முதலிய எழுப்பி நடத்திடும் விச்சை சாலவும் வியப்பது நிற்க வாக்கும் மனமும் போக்குள தனுவுஞ் | | | சொல்லும் நினைவுஞ் செய்யுஞ் செயலும் நல்லவுந் தீயவு மெல்லா மறிந்து முறைபிற ழாமற் குறைவுநிறை வின்றாய்க் காலமுந் தேசமும் மாலற வகுத்து | |