பக்கம் எண் :

626சித்தாந்த சாத்திரம்

15 நடுவுநின் றருத்தலின் நடுவனா குதியே
20 சான்றோர் செய்தி மான்றிருப் பின்றே
சாலார் செயலே மாலா குவதே
அத்துவா மெத்தி யடங்கா வினைகளுஞ்
சுத்திசெய் தனையே ஒத்தகன் மத்திடை
நீங்கின வென்னை யூங்கூழ் வினைகளும்
25 ஆங்கவை யருத்துவ தாரைகொல் அதனாற்
கருமமு மருத்தங் கடனது வின்றாந்
தருமம் புரத்தல் பெருமைய தன்றே
கண்ணினுண் மணிய கருத்தினுட் கருத்த
வெண்ணெய் வேந்த மெய்கண்ட தேவ
  இடர்ப்படு குரம்பையுள் இருத்தித்
துடைப்பதில் லாவரு டோன்றிடச் சொல்லே.   16

     (உரை) தேராதுரைப்பன் தெருமரலுளத்தொடு பேராதருளுதல்
பெரியோர் கடனே - பெரியோய் யான் இன்னமொன்று விசாரியாமல்
விண்ணப்பஞ் செய்கிறேன் தெளிவில்லாத உள்ளத்தொடுங் கூடுதலாலே,
அஃதாவதுதான், நீங்காது நிற்பது உனது முறைமை யாதலால்; நின்னைக்
கலப்பதென் னுண்மையே - உன்னை நான் இப்போது புதிதாகக் கூடுவே
னென்பது எனதுண்மையாம்; நின்னது நேர்மை சொல் மனத்தின்றே - நீதான்
இதற்கு நேர்வையோ வெனின் வாக்குமனத்துக்கு மெட்டாததாம்; எழுவகைத்
தாதுவின் ஏழ்துளையிரண்டும் பெருமுழைக் குரம்பையிற் பெய்து அகத்தடக்கி
நீக்கி என்றனைப் போக்கிற நிறுத்தி இச்சை முதலிய எழுப்பி நடத்திடும்
விச்சை சாலவும் வியப்பு அது நிற்க - எனக்கு நீ சத்த தாதுக்களும்
இவ்வாயிலேழும் பெருவாயி லிரண்டுமாகிய பெரிய குவைப்பாழிலே என்னை
யாக்கி அதனகத்தடக்கி அவ்வறியாமையை நீக்கி மீண்டுந் தனது ஆக்கினை
யாலே போக்கற நிறுத்தி எனது இச்சா ஞானக்கிரியைகளை நீயே யெழுப்பி
அவையிற்றை நடத்தியிடும் வித்தை மிகவும் ஆச்சரியமாம், அது நிற்க;
வாக்கும் மனமும் போக்குள தனுவுஞ் சொல்லும் நினைவுஞ் செய்யுஞ்
செயலும் நல்லவுந் தீயவும் எல்லாமறிந்து முறை பிறழாமற் குறைவு
நிறைவின்றாய்க் காலமுந் தேசமும் மாலற வகுத்து நடுவுநின்று அருத்தலின்
நடுவ