பக்கம் எண் :

இருபாவிருபது627


னாகுதியே - அவரவர் மனவாக்குக் காயங்களானும் நீங்காச் சிறையாகிய
அவ்வுடலானும் நினைத்துச் சொல்லிச் செய்தவற்றின் நன்மை தின்மை
யெல்லாம் நீ யறிந்து அது முன்பின் மாறுபடாமல் [புண்ணிய பாவ
பலன்களை அனுபவிக்கத் தக்க காலங்களையும் அவற்றைப் பொசிக்கைக்
கிருப்பிடமான தேசங்களையும் மயக்கமற வகுத்துப்] பொசிப்பித்துத் தனது
பிரேரக முறைமை ஏறியுங் குறைந்து மில்லாமல் நடுவனுமாகி நின்றாய்
அதனாலும்; சான்றோர் செய்தி மான்றிருப்பின்றே சாலார் செயலே
மாலாகுவதே - ஞாதாக்கள் செயலறச் செய்கையாலே அவர்களுக்கு விரிவு
கூட்டமில்லை, பொருந்தார் செய்தியே கூட்டுவது மயக்கம் ஆதலானும்;
அத்துவா மெத்தி அடங்கா வினைகளுஞ் சுத்திசெய்தனையே ஒத்த
கன்மத்திடை - கன்ம வொப்பில் மந்திரம் பதம் வன்னம் புவனம் தத்துவங்
கலையென்று சொல்லப்பட்ட ஆறத்துவாவிலும் நீ நிறைந்திருக்கப்படா நின்ற
சஞ்சித கன்மத்தையுஞ் சோதிக்கையால்; நீங்கின என்னை ஊங்கு ஊழ்
வினைகளும் ஆங்கு அவை அருத்துவது ஆரை கொல் அதனால் -
அவ்விடத்து ஊழ்வினைகளும் என்னைவிட்டு நீங்கினவாகையாலே அவை
யாரை வந்து பொசிப்பித்தன அதனால்; கருமமும் அருத்துங் கடனதுவின்றாந்
தருமம்புரத்தல் பெருமையதன்றே - கன்மந்தானும் அனுபவிப்பவனிடத்துத்
தானே பொருந்துவது மில்லையாம், நீ அக்கன்மத்துக் கீடாக நடத்துவையாகில்
உன் பெருமைக்கும் அது பொருந்தாது, ஆகையால் கன்மம் நீங்கி
அருளாமாறு எப்படி; கண்ணினுள் மணிய கருத்தினுட் கருத்த வெண்ணெய்
வேந்த மெய்கண்டதேவ இடர்ப்படு குரம்பையுள் இருத்தித் துடைப்பதில்லா
அருள் தோன்றிடச் சொல்லே - கண்ணிற் பாவைபோலவுங் கருத்துள்
அறிவுபோலவுமாகிய திருவெண்ணெய் நல்லூருக்கு நாயகமாகிய மெய்கண்ட
தேவனே துக்கவுடலுள் வைத்து நீங்காத் திருவருள் ஏது சொல்லென்றவாறு.

     இச்செய்யுள் கன்மம் நீங்கு முறைமையும் நீக்கினால் அவை போகிற
முறைமையும் வினாயது; உத்தரம்: 'உடலுக் கமைத்தலுயிரொடு நீங்கா -
திடவரு[ள் கன்ம ம]ருத்தும்.'                                   16