சொற்றொழும்பு கொள்ளநீ சூழ்ந்ததுவும் நிற்செயல்கள் மற்றவர்கள் நின்நோக்கின் மாய்ந்தவுயிர்க் - குற்ற மொளித்தியாங் கைய வுயர்வெண்ணெய் நல்லூர்க் குளித்தமதுக் கொன்றையெங் கோ. 17 | (உரை) சொற்றொழும்பு கொள்ளநீ சூழ்ந்ததுவும் நிற்செயல்கள் மற்றவர்கள் நின் நோக்கின் மாய்ந்த வுயிர்க்குற்ற மொளித்தியாங்கு ஐய உயர் வெண்ணெய்நல்லூர் குளித்த மதுக் கொன்றை எங்கோ - உயர்ந்த வெண்ணெய் நல்லூருக்குக் கர்த்தாவாகி மதுவின் மூழ்கிய கொன்றைமலரைப் புனைந்த எம்முடைய சுவாமியே, நீ கன்மம் நீக்குமளவில் உனது சொல்வழி யடிமையாகச் செய்யலாமாயின், உன் செயலென்னாத பெத்தரும் நினது பான்மையை நீங்காதுநிற்க உயிர் கேடுபடாநின்றது, உன்னை நீங்காது நிற்பாரெல்லாருமொப்பச் சிலர்க்குக் குற்றமெவ்விடத்தே போயது கொல்லென்றவாறு. இச்செய்யுள், செயலற நிற்க மலம்போனபடி எப்படியென்று வினாயது; உத்தரம் : நின்செயலிற் றம்மைக் கொடுத்தார் வினைதீர்த்தார் துன்பமற மாயைத் துடக்கறுமே - முன்புமலந் தான்கெடாச் சத்தி கெடுமாமிக் காயவிருள் வான்கெடா வாளொளிவந் தால். இத்துணையும் வினாவாக்கி மேற்கூறியவையிற்றுக்கு உத்தரவாதமாக நின்றது. 17 | 5 | கோலங் கொண்ட வாறுண ராதே ஞாலங் காவலன் யானெனக் கொளீஇப் பொய்யை மெய்யெனப் புகன்று வையத் தோடாப் பூட்கை நாடி நாடா என்னுட் கரந்தென் பின்வந் தருளி | | | என்னையுந் தன்னையு மறிவின் றியற்றி என்னது யானெனு மகந்தையுங் கண்டு யாவயின் யாவையும் யாங்கணுஞ் சென்று புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து | |