| 10 | மிக்க போகம் விதியால் விளைத்திட்டு | | 15 | எற்பணி யாளாய் எனைப்பிரி யாதே ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு என்வழி நின்றனன் எந்தை யன்னோ அருள்மிக வுடைமையின் அருட்டுறை வந்து பொருள்மிக அருள்தலும் பொய்ப்பகை யாதலுங் | | 20 | கைகண்டு கொள்ளெனக் கடலுல கறிய மெய்கண்ட தேவன் எனப்பெயர் விரீஇத் தன்னுட் கரந்து தான்முன் னாகித் தன்னதுந் தானுமா யென்னையின் றாக்கித் தன்னையு மென்னையுந் தந்து தனது | | | செய்யா மையுமென் செயலின் மையும் எம்மான் காட்டி யெய்தல் அம்மா எனக்கே அதிசயந் தருமே. 18 | (உரை) கோலங் கொண்டவாறு உணராதே ஞாலங் காவலன்யான் எனக் கொளீஇப் பொய்யை மெய்யெனப் புகன்று வையத்து ஓடாப் பூட்கை நாடி நாடா - தேவரீர் திருமேனிகொண்ட முறைமையை யுணராமல் பிரபஞ்சத்துக்கு நானே கர்த்தாவென்னக் கொண்டு, பிரபஞ்சத்தை ஊராத பேய்த்தேரின் செலவை விசாரித்து அறியாதாரைப்போல, அசத்தாகிய பிரபஞ்சத்தைச் சத்தெனக் கருதிக்கொண்டிருக்கிற; என்னுள் கரந்து - எனக்குள்ளே மறைந்து; என்பின் வந்தருளி - என்னை முன்னாக்கித் தான் எனக்குப்பின் வந்து; என்னையுந் தன்னையும் அறிவின்றியற்றி - தன்னையும் என்னையும் அறியாத படி யியற்றி; என்னது யானெனும் அகந்தையுங் கண்டு - யானெனதென்னும் அகந்தையு முண்டாக்கி; யாவயின் யாவையும் யாங்கணுஞ் சென்று புக்குழிப்புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து - எந்த யோனியிலும் எந்த வுலகத்தும் நான் சென்று புக்கவிடமெங்கும் புக்கு மீண்டவிடமெங்குந் தானும் மீண்டு; மிக்க போகம் விதியால் விளைத்திட்டு - எனக்கு மிகுத்த புசிப்புக்களைத் தப்பாமல்விளைத்து; எற்பணியாளாய் எனைப் பிரியாதே - எனக்குப் பண்ணைக்காரனாகிய ஏவலாளாய் என்னைவிட்டு நீங்காதே; ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு என்வழி நின்றனன் எந்தை - வில்லொடு குத்தி விளையாட |