பக்கம் எண் :

630சித்தாந்த சாத்திரம்

விடுமாபோல ஓடித் திரியும் ஆடலைக் கண்டு முன்னெல்லாம் என் வழி
நின்றாய், எனக்குச் சுவாமியாயுள்ளவனே; அன்னோ - அய்யோ அய்யோ;
அருள் மிக வுடைமையின் 1அருட்டுறை வந்து - தனக்கு அருளே மிகுத்த
செல்வமாயிருக்கையாலே திருவெண்ணெய்நல்லூரிலே திருமேனி கொண்டு
வந்து; பொருள் மிக அருள்தலும் பொய்ப்பகையாதலுங் கைகண்டுகொள்
ளெனக் கடலுலகறிய மெய் கண்டதேவன் எனப் பெயர் விரீஇ - நீ எல்லாப்
பொருளையுங் கூட்டுதலும் கூட்டியும் பொய்க்குப் பகையும் மெய்க்கு
உறவுமாய் நிற்றலை எனக்குக் காண்பிப்பான்பொருட்டுத் தண்கடல் சூழ்ந்த
உலகமறிய மெய்காணாத ஆன்மாக்களுக்கு மெய்யைக் காண்பித்த தெய்வ
மென்னும் பெயரை விரித்து நிறுத்தி; தன்னுட் கரந்து தான் முன்னாகி
தன்னதுந் தானுமாய் என்னை இன்றாக்கி - தனக்குள்ளே என்னையடக்கித்
தான் என்பின் செல்வதன்றித் தன் செயலுந் தானுமல்லது என் செயலையும்
என்னையும் இன்றாக்கி; தன்னையு மென்னையுந் தந்து என்னுண்மையுந்
தன்னுண்மையும் அறியும்படி யுணர்த்தி; தனது செய்யாமையும் என்
செயலின்மையும் எம்மான் காட்டி - தான் சகல வித்தையும் ஆன்மாக்களுக்குக்
கன்மத்துக் கீடாகக் கூட்டிப் பொசிப்பிக்கையிலே தான் அதிற் பணியற்று
நிற்கிற முறைமையையும் யான் அதிலே கூடி அதுவதுவாக மொத்துண்
கையிலே எனக்கொரு செயலற்று நிற்குந் தன்மையையுந் தலைவன் காட்டினது;
எய்தல் அம்மா எனக்கே அதிசயந் தருமே - எனக்கு ஏறப் பொருந்து
கையாலே ஆச்சரியம் எனக்கே தருமென்றவாறு. அம்மா வென்றது
கேட்பிக்கும்; பூட்கைக் கிளவி மேற்கோளாம்.

     இச்செய்யுள் சிவன் நின்று நடத்துகிற முறைமை யறிவித்தது.    18

தருமா தருமத் தலைநின்றாழ் வேனைக்
கருமா கடல்விடமுண் கண்டப் - பெருமான்
திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேத வனத்தான்
உருவென்ன வந்தெடுத்தா னுற்று.        19

     (உரை) தரும அதருமத் தலைநின்று ஆழ்வேனைக் கருமா கடல் விட
முண் கண்டப் பெருமான் திருவெண்ணெய்நல்லூர்ச் சுவேத


1. அருட்டுறை : திருவெண்ணெய் நல்லூரிலுள்ள சிவாலயம்; 'பெண்ணைத்
தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா' என்பது சுந்தரர்
தேவாரம்.