பக்கம் எண் :

இருபாவிருபது631


வனத்தான் உருவென்ன வந்தெடுத்தான் உற்று - புண்ணிய பாவங்களின்
எல்லை நீங்காது திரியும் என்னை அவ்வினை துலையொப்பறிந்தவனாதலாலே,
மால் பிரமன் முதலிய தேவர் இறந்துபோகாமற் கருணையாலே பெரிய கடலில்
விடத்தை யுண்டு உய்யக்கொண்ட நீல கண்டனாகிய தலைவன்
திருவெண்ணெய் நல்லூரிலெழுந்தருளிச் சுவேதவனப் பெருமாளென்னும்
பிள்ளைத் திருநாமத்தையுமுடைய மெய்கண்டதேவன் இவ்வடிவிலே யான்
ஈடேறும்படி என்னை யடிமையாகக் கொண்டான் பற்றி யென்றவாறு.

     இச்செய்யுள் பரமேசுவரன் பக்குவமறிந்து இரட்சிப்பனென்பது
சொல்லிற்று.                                                 19

5 உற்றவர் பெற்றவ ரற்றவர் முற்றும்
அற்றவர்க் கற்றவன் அல்லவர்க் கல்லவன்
அந்த மாதி யில்லவன் வந்து
குரக்கு மனத்துக் கொடியேன் பரக்கும்
பரப்பைக் குவித்து நிறுத்திப் பிடித்திட்டு
10 இருள்வெளி யாகும் மருளினை யறுத்து
வந்து புகுதலுஞ் சென்று நீங்கலு
மின்றி யொன்றாய் நின்றஅந் நிலையில்
ஒன்றா காமல் இரண்டா காமல்
ஒன்று மிரண்டு மின்றா காமல்
15 தன்னது பெருமை தாக்கா னாயினும்
என்னது பெருமை யெல்லா மெய்தித்
தன்னை யெனக்குத் தருவதை யன்றியும்
என்னையு மெனக்கே தந்து தன்னது
பேரா நந்தப் பெருங்கட லதனுள்
20 ஆரா வின்ப மளித்துத் தீரா
உள்ளும் புறம்பு மொழிவின்றி நின்ற
வள்ளன்மை காட்டி மலரடி யருளிய
மன்ன னெங்கோன் வார்புனற் பெண்ணை
வெண்ணெய் காவலன் மெய்கண்ட தேவன்
  அண்ணல் அருளா லயத்தன் நண்ணிய
மலமுத லாயின மாய்க்கும்
உலக வுயிர்க்கெல் லாமொரு கண்ணே.     20