(உரை) உற்றவர் பெற்றவர் அற்றவர் முற்றும் அற்றவர்க் கற்றவன் அல்லவர்க் கல்லவன் அந்தமாதியில்லவன் வந்து - ஆசாரியனருளிச் செய்த உண்மையிலே பொருந்தினவர்கள் அதனைச் சிந்திக்கப்பெற்றவர்கள் அந்த உண்மையிலே முழுதுந் தன்னைக் கொடுத்துத் தானதுவாய்த் தன் செயலற்றவர்க்குத் தான் அவர் செயலாய் நிற்கிறவன் தானென்றும் அவனென்றும் இரண்டுபட்டவர்களுக்கு வேறுபட்டிருக்கிறவன் தோற்றமும் ஈறும் இல்லாதவன் திருமேனி கொண்டு வந்து; குரக்கு மனத்துக் கொடியேன் பரக்கும் பரப்பைக் குவித்து நிறுத்திப் பிடித்திட்டு - குரங்குபோலே ஓரிடத்து நிலையில்லாத மனத்தையுடைய கொடிய வினையேன் உழன்று திரியும் வருத்தத்தைக் கெடுத்து ஒரு நிலையிலே நிறுத்தி என்னை யடிமை பிடித்து என்னும்படிக் காட்டி; இருள் வெளியாகும் மருளினை யறுத்து - வெளியும் இருளுமாகிய மயக்கத்தைக் கெடுத்து இவை யிரண்டுமல்லவாய் நின்ற நிலை காட்டி; வந்து புகுதலுஞ் சென்று நீங்கலுமின்றி ஒன்றாய் நின்ற அந்நிலையில் - கண்ணிற்படலத்தை ஒருவன் வந்துரித்த விடத்துக் கண்ணொளியைச் சூரியப்பிரகாசம் வந்து கூடவுமில்லை சூரியப்பிரகாசத்திலே கண்ணொளி போய்க் கூடினதுமில்லையதுபோல, தானும் புதிதாக வந்து பொருந்துதலுங் கூடினவர் சென்று நீங்கிப்போகலும் இல்லாதபடி, ஏகமாய் அப்படி நின்றநிலைதான்; ஒன்றாகாமல் - பொன்னும் பணியும்போல ஒன்றென்னும் மாயாவாதமுமல்லவாய் உடலும் உயிரும்போல வொன்றாய்; இரண்டாகாமல் - இருளும் வெளியும்போல இரண்டாயிருக்கிற பேதவாதமுமல்லவாய் கண்ணும் ஆதித்தனும் போலவிரண்டாய்; ஒன்றுமிரண்டு மின்றாகாமல் - சத்தமும் அத்தமும் (=பொருளும்) இரண்டாயிருந்து பின்பு ஒன்றானதுபோல ஆன்மா வென்றுஞ் சிவனென்றும் இரண்டாயிருந்து முத்தியில் ஒன்றாமென்னும் பாற்கரியன் மதமுமல்லவாய் ஆன்மாவும் ஆன்மஞானமும்போல இரண்டா யிருந்து ஒன்றாவதாய்; தன்னது பெருமை தாக்கானாயினும் என்னது பெருமை எல்லாமெய்தி - தனது முதன்மையாகிய பஞ்சகிருத்தியம் எனக்குத் தாரானாயினும் எனக்குப் பெருமையாகிய பாச சாலங்களெல்லாந் தான் முன்னின்று மேற்போட்டுக்கொண்டு தன்னை எனக்குத் தருவதையன்றியும்; என்னையும் எனக்குத் தந்து - தன்னுண்மை யான் பெறுவதன்றி என்னுண்மை யான் பெறும்படித் தந்து; தன்னது பேரானந்தப் பெருங்கடலதனுள் ஆராவின்பம் அளித்து - தனதாகிய பேரானந்தக் |