|
காவியம் இறைமகனுக்கு
மகிமையாகவும் மக்களுக்கு நன்மையாகவும்
கவிஞர் கண்ணதாசனுக்கு மங்காப் புகழாகவும் என்றும்
நிலைத்திருக்கும்.
தமிழ்த்
தாயின் மார்பில் ‘இயேசு காவியம்’ என்ற அணிகலனை
அழகுற மிளிரச் செய்த பெருமை கலைக்காவிரியைச் சாரும். இதன்
இயக்குநர் அருள்திரு எஸ். எம். ஜார்ஜ் அவர்களை என் உளமாரப்
பாராட்டுகிறேன். மேலும், இக்காவியம் உருவாகி வெளிவருவதற்கு
உதவிய மற்றவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியும் பாராட்டும்.
அருட்சுனையாம்
இயேசுவின் வரலாற்றை எடுத்தியம்பும் ‘இயேசு
காவியம்’ என்ற இந்த நூலை அனைவரும் படித்துப் பயனடைய
ஆசிக்கின்றேன். |