|
“இயேசு காவியம்”
- பேச்சுவாக்கிலே துவங்கிய ஒரு முயற்சி.
கலைக்காவிரியின் சார்பில் தந்தையர் என்னைச் சந்தித்துப்
பேசியபொழுதும் திரு. சந்திரமோகன் என்னை விடாப்பிடியாகக்
குற்றாலத்திற்குக் கூட்டிச் சென்றபொழுதும் இது ஏதோ ஓரிரு நாள்
வேலை என்றே நான் எண்ணியிருந்தேன்.
ஆனால்,
வேலை செய்ய உட்கார்ந்தபொழுது பயம் என்னைப்
பீடித்தது! ‘என்ன பிரம்மாண்டமான வேலையில் நாம் கைவைத்து
விட்டோம்’ என்று பீதியடைந்தேன். இயேசு பெருமான் அருள்
பாலித்தார்! நான் இதுவரை உழைக்காத வகையில், தொடர்ந்து
பதினைந்து நாட்கள், தினமும் எட்டு மணி நேரம் வேலை செய்து
இதை முடித்தேன் என்றால், அது அவரது கருணையே!
பலவித
சந்தங்களில், சில பகுதிகளை இசை அமைப்புக்கு
ஏற்றவாறும்கூட காவியத்தை அமைத்திருக்கிறேன். கூடவே இருந்து,
விளக்கங்கள் தந்துதவிய அருள்திரு தந்தையர் ஸ்தனிஸ்லாஸ்,
ஜார்ஜ் ஆகியோரின் உதவியை நான் என்றும் மறக்க இயலாது.
ஒரு பெரும் ஞான சேவையைச் செய்துவிட்டோம் என்ற ஆத்ம
திருப்தியை அவர்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள்.
பல
சமயங்களில், பலர் என்னை இறவாக் காவியம் ஒன்று
எழுதுங்கள் என்று வற்புறுத்தியதுண்டு. அந்த இறவாக் காவியம்
‘இயேசு காவியம்’ தான் என்று நான் உறுதியாகக் கூறமுடியும்.
கண்ணதாசன்
1கவிஞர்
அவர்கள் ‘இயேசு காவியம்’ எழுதி முடித்தபின்
திருச்சியில் நிகழ்த்திய இரு சொற்பொழிவுகளின் தொகுப்பு |