|
தமிழுலகம் ஒப்பில்லாத்
தலைவனாம் கவிஞர் கண்ணதாசனை
இழந்து துயருறும் வேளையில், ‘இயேசு காவியம்’ என்ற அவரது
சிறப்பான படைப்பை, அவர் நம்மிடையே இல்லாத நிலையில்
வெளியிட வேண்டியிருக்கிறதே என்ற எண்ணம் இதயத்தைச் சுக்கு
நூறாக்குகிறது! கண்ணீர் திரை போடுகிறது; கைகள் எழுத
மறுக்கின்றன.
"இருப்பேன்
பலநாள் என்றானே-எம்மை
ஏய்த்தது போல்இன்று சென்றானே-அவன்
சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே-அந்த
தேவன் அருகினில் அழைத்தானோ?”
என்று மனம்
ஏங்குகிறது!
*****************
கலை,
இலக்கியம் எல்லாம் அழகே உருவான இறைவனை
உலகுக்கு உணர்த்துகின்றன. கலையழகு எங்கெங்கு தென்படுகிறதோ,
அங்கெல்லாம் நாம் இறைவனைக் காண்கிறோம். இந்த
மனப்பான்மையோடுதான் அரசவைக் கவிஞர் கண்ணதாசன்
அவர்களை, இறைவன் அவர்களுக்குச் சிறப்புக் கொடையாக
அளித்திருந்த கவிதா வளத்தைக் கொண்டு இறைமகன் இயேசுவின்
புகழ் பாடும்படி அழைத்தோம். தமிழகத்தின் தனிப்பெரும்
கவிஞராய் விளங்கிய கண்ணதாசன் அவர்கள் தமிழ் கூறும்
நல்லுலகிலுள்ள அனைவருக்கும் பொதுவான ஒரு சொத்து. அந்தச்
சொத்தில் நமக்கும் உரிமை உண்டு என்று எண்பிப்பதில்
பேருவகை கொள்கிறோம்.
சமயங்கள்
ஒன்றோடொன்று உறவுகொள்ள வேண்டுமென்பது
இறைவனின் திட்டம். “ஒன்றாய் வாழ்வோம், உரையாடுவோம்,
ஓரிதயம் கொண்டிருப்போம்” (ரிக்வேதம் X, 9) என்ற
மனப்பான்மை இன்று வளர்ந்து வருவதைக் காண்கிறோம்.
ஆகையால் இன்று நாம் நெருங்கிய சமய உறவு கொள்கிறோம்.
ஒரு சமயத்தினர் பிற சமயத்தினரோடு உறவாடுகிறோம். ஒரு
சமயத்தினர் பிற சமயத்தினரின் ஆன்மீக செல்வங்களைப்
|