இரண்டாம் பாகம்
சேர்க்குகின்ற பொருந்திய
உண்மையை, மாதா, பிதாக்கள், பிராணனெனச் சொல்லும் மனைவி, பந்துக்கள், நாம் அடைகின்ற
வீட்டிற்குச் சொந்தமான புதல்வர்களாகிய இவர்கள் பெற்றுக் கொள்வதற்குச் சொல்லித் தெரிவிக்காதவர்கள்
முடிவிற் மாறாத வருத்தத்தை யுடைய அக்கினியினது நரக லோகத்தின் கண் விழுவார்கள்.
2804.
அரியபொன் மணிபூ ணாடை யாதியா மற்று முள்ள
பொருள்பல வெனினு மியார்க்கும் வழங்குதல் பொதுமை யன்றோ
வொருதிரு மொழியால் வாழு முலகென்றா லதனைத் தோன்றா
திருள்பட மறைத்தல் கல்லாப் புல்லர்க்கு மிழிவ தாமால்.
37
(இ-ள்) அன்றியும், அருமையான திரவியம், இரத்தினம், ஆபரணம், வத்திர முதலாக மற்றுமுள்ள
பொருள்கள் பல வென்றாலும் அவற்றை யாவருக்கும் கொடுப்பது பொதுத்தன்மையாகும். இவ்வுலகமானது தெய்வீகந்
தங்கிய ஓர் வார்த்தையால் ஜீவிக்குமென்று சொன்னால் அவ் வார்த்தையை விளங்காது அந்தகாரப்
படும்படி ஒளிப்பது படியாத கீழ் மக்களுக்கும் நிந்தையாகும்.
2805.
போதமுந் தரும நேர்ந்த புந்தியும் புகழின் பேறும்
வேதமுங் கலையும் ஞான விளக்கமு மனுவி னூலுங்
காதலிற் பயந்த மைந்தர் கருத்தினிற் சிறப்பச் செய்தல்
தாதையர் கடனே யன்றிக் கரப்பது தகைமைத் தன்றே.
38
(இ-ள்) அன்றியும்,
அறிவையும், புண்ணியத்தைப் பொருந்திய புத்தியையும், கீர்த்தியினது பேற்றையும், வேதங்களையும்,
சாத்திரங்களையும், ஞானத்தினது விளக்கத்தையும், நீதியினது கிரந்தங்களையும், ஆசையோடும் பெற்ற
புத்திரங்களின் சிந்தையிற் சிறக்கும்படி செய்தல் தந்தையர்களின் கடமையே யல்லாமல் அவற்றை
ஒளிப்பது அவர்களுக்குத் தகுதியை யுடைய தல்ல.
2806.
என்னுளத் தவிசின் வாழு மிறையவன் றூதை யன்னோர்
நன்னிலைக் கலிமாத் தன்னை நாட்டியோர் செப்பின் வைத்தென்
றன்னையு நோக்கா வண்ணந் தடுத்தனை யையா வேறு
பன்னுவ தென்கொல் பன்னிற் பழுதன்றிப் பயனு மின்றே.
39
(இ-ள்) எனது தந்தையே!
என திதயமாகிய ஆசனத்தின் கண் வாழா நிற்கும் இறைவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலாகிய
நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களையும்,
அந் நபிகட்
|