பக்கம் எண் :

சீறாப்புராணம்

1036


இரண்டாம் பாகம்
 

 (இ-ள்) அவ்வாறு நின்ற எனது தாயினது வருத்தத்தை அங்கு வந்து சேர்ந்தவர்களான அந்தப் புருடர்கள் யாவரும் பார்த்துப் பயந்து என்னையும் பார்த்து என்னை எனது தந்தையி னிடத்திற் கொண்டு போகின்ற அவர்களின் முன்னர் முதலி லருந்திய மதுவினது வெறியானுத தீரப் பெற்ற முகமலர்ச்சி யுற்றிருந்த அவன் நோக்கி இத்தன்மைத் தானவைகள் உண்டான காரணம் யாதென்று வசங்கெட்டு ஓடி வந்தான்.

 

2801. திடுக்கொடும் பதறி யேங்கிச் செங்கையாற் றழுவி வாய்விண்

     டடிக்கடி யைய னேயெ னையனே யென்னக் கூவி

     வடிக்கண்ணீர் பனித்து நிற்கு மாதையு நோக்கிச் சூழ்வீ

     ரிடுக்கணே தென்னக் கேட்ப யாதொன்று மறியே மென்றார்.

34

      (இ-ள்) அவ்வாறு வந்து, அச்சத்தோடும் நடுக்க முற்று இரங்கிச் செந்திறத்தை யுடைய கைகளினால் என்னைக் கட்டி யணைத்து வாயைத் திறந்து அடிக்கடி அப்பனே! எனது அப்பனே! என்று கூப்பிட்டுக் கூர்மை பொருந்திய விழிகளின் நீரைச் சொரிந்து நின்ற பெண்ணாகிய எனது தாயையும் பார்த்து இங்கு வளைந்திருப்பவர்களே! இத் துன்பம் யாதென்று வினாவ, அவர்கள் நாங்கள் யாதொன்று முணரோ மென்று சொன்னார்கள்.

 

2802. எனக்குமுன் னிருந்து தாதை யிருகணீ ரொழுகப் பார்த்தின்

     றுனக்குறும் வரா றென்னோ டுரையென வுரைப்பப் பின்னர்

     கனக்கருங் கவிகை வள்ளல் நும்பெயர் கருத்து ணாட்டி

     மனைக்கணி னிருந்தோர்க் கெல்லாந் தெரிதர வகக்கு லுற்றேன்.

35

      (இ-ள்) அவர்கள் அவ்விதஞ் சொல்ல, எனது தந்தையான பண்டிதன் எனக்கு முன்னா லுறைந்து இரு விழிகளினது நீரும் சிந்தும் வண்ணம் என்னை நோக்கி இன்று உனக்கு வந்து சேர்ந்த வரலாற்றை என்னுடன் கூறுவாயாக வென்று கேட்க, கரிய மேகத்தினது குடையை யுடைய வள்ளலாகிய நபிகட் பெருமானே! உங்களது திரு நாமத்தை இதயத்தின் கண் நிற்கச் செய்து பிற்பாடு வீட்டினிடத் துறைந்தவர்க ளனைவருக்கும் விளங்கும் வண்ணம் பிரித்துச் சொல்ல ஆரம்பித்தேன்.

 

2803. தெறுகொலைப் பாவங்க ளியாவுஞ் சிதைத்துநற் கதியிற் சேர்க்கு

     முற்பொருட் டந்தை தாய ருயிரெனு மனைவி கேளிர்

     பெறுமனைக் குரிய மக்கள் பெறுவதற் குரைத்துக் காட்டா

     ரிறுதியி னொழியாத் துன்பத் தெரிநர கிடையின் வீழ்வார்.

36

      (இ-ள்) அழிக்கா நிற்கும் கொலைத் தொழிலினது பாவங்களெல்லாவற்றையுங் கெடுத்து நன்மை பொருந்திய மோட்சத்திற்