பக்கம் எண் :

சீறாப்புராணம்

1035


இரண்டாம் பாகம்
 

அம்மார்க்கத்திற்கு எனது மனமுடன் பட்டுத் தேவர்களான மலாயிக்கத்து மார்கள் பணியா நிற்கும் அழகை யுடைய முகம்மதுவே! முகம்மதுவே! என்றாகிய உங்களது தெய்வீகந் தங்கிய அபிதானத்தை அடிக்கடி சொல்லினேன். அதனால் எனது மாதா வானவள் இவன் ஏன் புலம்பத் தொடங்கினான்? என்று சொல்லி அழுது நடுக்க முற்று வந்தாள்.

 

2798. மனப்பயம் பெருத்து வாடி மறுகுறு மனைக்கோர் மாற்றந்

     தனைக்கொடுத் திலனியா னென்னச் சஞ்சலம் பெரிது முற்றி

     யினத்துளா டவரைக் கூவ வென்பிழை விளைந்த தென்னக்

     குனித்தவிற் றடக்கை வீரர் திடுக்கொடுங் கூண்டு வந்தார்.

31

      (இ-ள்) அவ்வாறு வந்து இதயத்தி னச்சமானது அதிகரிக்கப் பெற்று மெலிந்து மனங் குழம்புத லடைந் மாதாவுக்கு யான் ஒரு வார்த்தை யாயினும் பதிற் கூறிலே னென்று அவள் கவலையானது அதிகமாக முதிரப் பெற்று எங்களது குடும்பத்திலுள்ள புருடர்களைக் கூப்பிட, வளைத்த கோதண்டத்தைக் கொண்ட பெருமை பொருந்திய கையை யுடைய அவ்வீரர்கள் இங்கு உண்டாகிய குற்றமென்னவென்று பயத்தோடுங் கூடி வந்தார்கள்.

 

2799. ஏதெனு மறியே னிங்ங னிருந்தனன் புலம்பு கொண்டான்

     மாதவ முடையீர் பித்தோ வஞ்சனைத் தொழிலோ சூழ்ந்த

     தீதெவை குறிப்பு நோக்கிச் செப்புமென் றினைய கூறி

     .வாதையிற் பதைத்துச் சோர்ந்து கண்ணினீர் வடித்து நின்றான்.

32

      (இ-ள்) அவர்கள் அவ்விதம் வர எனது தாயானவள் மகா தவத்தை யுடையவர்களே! யான் யாதென்று முணரேன், இவன் இவ்விடத்தி லிருந்தான். புலம்பத் தொடங்கினான். இஃது பைத்தியமோ? அல்லது மாயச் செய்கையோ? இவற்றில் வந்து வளைந்த தீமையானவை யாவை? அவ் வடையாளங்களை நீங்கள் பார்த்துச் சொல்லுங்க ளென்று இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லித் துன்பத்தினால் துடித்து மெலிந்து விழியின் நீரை ஒழுகும் படி விட்டு நின்றாள்.

  

2800. அன்னையா குலத்தை நோக்கி யடுத்தவர் பலரு மேங்கி

     யென்னையு நோக்கித் தாதை பாலிற்கொண் டேகு கின்றார்

     முன்னனை மயக்கந் தீர்ந்து முகமலர்ந் திருந்தான் கண்டா

     னின்னவை விளைந்த தென்னென் றிடைந்தெதி ரோடி வந்தான்.

33