இரண்டாம் பாகம்
நாமமும் பெருமையும் அருமையும்
உண்மையை யுடைய அற்புதங்களினது பதவியும் மனதின் கண் பொருந்தும் வண்ணம் தெளியப் படித்தேன்.
அந்தக் காகிதத்தினிடத்து ஓர் பிரகாசமானது ஒருவருங் காணாத விதத்தில் உதய மாயிற்று.
2795.
பதிவுபெற் றிருக்குந் தாராக் கணத்தொளி பலவும் வெய்ய
கதிரவ னொளியுஞ் சோதிக் கலைநிறைந் துவாவிற் றோன்று
மதியினல் லொளிவுந் தூண்டா வண்சுட ரொளிவுந் தோன்றும்
புதியபே ரொளிவுக் கேற்பப் பொருத்தினும் பொருந்தி டாதே.
28
(இ-ள்) பதிவைப் பெற்றுறையா
நிற்கும் பலவாகிய நட்சத்திரக் கூட்டத்தினது பிரகாசமும், வெவ்விய சூரியனது பிரகாசமும், ஒளிவைக்
கொண்ட கிரணங்க ளானவை நிறையப் பெற்றுப் பூரணையிலுதய மாகுகின்ற நல்ல சந்திரனது பிரகாசமும்,
தூண்டாத அழகிய தீபத்தினது பிரகாசமும், அவ்வாறு தோற்றமாகிய புதுமையை யுடைய அந்தப் பெரிய பிரகாசத்திற்குப்
பொருந்தும் படி பொருத்தினாலும் பொருந்தாது.
2796.
கண்களும் வழுக்கிக் கூசிக் காரணப் பயமுள் ளூறிப்
பண்கெழுங் கலிமா வென்னும் பத்திவே ரிதயத் தூன்றித்
திண்கொளு மீமா னென்னுஞ் செழும்பயிர் தழைத்து நீண்ட
மண்கொளாப் பெரும்பே ராசை மனதுறப் படர்ந்த தன்றே.
29
(இ-ள்) அந்தப் பிரகாசத்தினால்
எனது இரு நயனங்களும் இழுக்கிக் கூச்ச மடையப் பெற்றுக் காரணத்தினது அச்சமானது உள்ளே பெருகிக்
கீதத்தைக் கொண்ட செழிய கலிமா வென்னும் ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர்ற சூலுல்லாஹிழு யென்ற
பத்தியாகிய வேரானது இருதயத்தின் கண்ணூன்றப் பெற்று வலிமையைக் கொண்ட ஈமா னென்று சொல்லும்
செழிய பயிர் ஓங்கி நீட்சியைப் பொருந்திய இவ்வுலகம் கொள்ளாத பெருமையையுடைய பேராசையானது
சிந்தையின் கண் பொருந்தும்படி படர்தலுற்றது.
2797.
தீனெனும் பெரும்பே ராசை மயக்கத்தாற் சிந்தை நேர்ந்து
வானவர் பரவும் வண்மை முகம்மதே முகம்ம தேயென்
றானுநுந் திருநா மத்தை யடிக்கடி யுரையா நின்றே
னேனிவன் புலம்புற் றானென் றேங்கியாய் பதறி வந்தாள்.
30
(இ-ள்) அவ்வாறு படர்த
லுற, தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தின் பெரிய பேராசையினது வெறியினால்
|