இரண்டாம் பாகம்
(இ-ள்) இந்தப் படியாக
நடக்கின்ற சமயத்தில், எமது பிதாவாகிய பண்டிதன் பெரிய ஈத்த மரத்தில் சுரக்கா நிற்கும்
கள்ளில் அதிகமாயருந்தி வெறியினால் இரு நயனங்களும் செந்நிற மடையப் பெற்று மனம் வேறாகிச்
செவ்விதான புத்தியும் மாறுதலுற்று ஒரு வார்த்தையும் அறிந்து பேசாது கொடிய கோபமானது அதிகரிக்கப்
பெற்றிருந்தான்.
2792.
வெறியினாற் றந்தை வைகும் வேளையி லீன்றா டானு
மறிகிலா வண்ணம் புக்கி யறைதிறந் தரும்பொற் செப்பைக்
குறியொடு மெடுத்து வல்லே கொண்டொரு புறத்திற் சார்ந்து
செறியுமுத் திரையை நீக்கி நோக்கினன் சிறப்ப மன்னோ.
25
(இ-ள்) பிதாவாகிய
அப் பண்டிதன் அவ்வாறு மயக்கத்தினால் தங்கியிருக்கும் சமயத்தில், என்னைப் பெற்றவளான மாதாவும்
அறியாத விதத்தில் வீட்டில் நுழைந்து அரங்கைத் திறந்து அருமையான பொன்னினாற் செய்த அந்தச்
செப்பை குறிப்புடன் கைகளினா லெடுத்து ஓர் பக்கத்திற் சீக்கிரத்திற் கொண்டு போய்ச் சேர்ந்து
அந்தச் செப்பிற் செறிந்த அடையாளத்தை யொழித்து அதைச் சிறக்கும் வண்ணம் பார்த்தேன்.
2793.
பத்தியின் றந்தை கூறும் படிக்கொரு கடுதா சங்ஙன்
வைத்திருந் ததின்மேல் லோர்பால் வரியொன்றிற் கலிமா வென்னு
முத்தரம் பிறக்கத் தீட்டு மெழுத்தினை வாசித் தோர்ந்து
வித்தையும் வீடும் பெற்றோ மெனவிரு விழியிற் கொண்டேன்.
26
(இ-ள்) அவ்விதம்
பார்க்க, எனது பிதாவாகிய அப் பண்டிதன் ஒழுங்கோடும் சொல்லிய படிக்கு அதனகம் ஒரு காகிதம் வைத்திருந்தது.
அந்தக் காகிதத்தின் மீது ஓர் பக்கத்தில் ஒரு வரியில் கலிமாவாகிய ழுலாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர்ற
சூலுல்லாஹிழு யென்னும் உத்தரமான துண்டாகும் வண்ணம் எழுதிய எழுத்தை யான் படித்துத் தேர்ந்து நாம்
ஞானத்தையும் மோட்சத்தையும் பெற்றுக் கொண்டோ மென்று அதை இரு கண்களிலு முத்தினேன்.
2794.
விரித்ததை நோக்கும் போழ்தின் விறனபி முகம்ம தென்னத்
திருத்திய பெயரும் வீறுஞ் சிறப்புமெய்ப் புதுமைப் பேறுங்
கருத்துறத் தெளிய வாசித் தனன்கடு தாசின் கண்ணே
யொருத்தருந் தெரியா வண்ண மொளியொன்று பிறந்த தன்றே.
27
(இ-ள்) அன்றியும்,
அதை விரித்துப் பார்த்த சமயத்தில், விஜயத்தைக் கொண்ட நபி முகம்மதெனச் செவ்வைப் படுத்திய
|