பக்கம் எண் :

சீறாப்புராணம்

1042


இரண்டாம் பாகம்
 

கொண்டது புத்தியல்ல. அஃது உங்களுடைய கூட்டத்திற்கும் கீர்த்தியல்ல.

 

2819. மதிக்குநல் லறமுண் டாதன் மானிட ராகிச் செம்போற்

     பதிக்குறுங் கதிபே றெய்தல் பாரினிற் றந்தை யென்போன்

     விதித்தசொற் கடவா தன்றி வேறுமந் திரமு முண்டோ

     வுதிக்குநின் னுள்ளத் துள்ளும் பெயரினை யொழித்தல் வேண்டும்.

52

      (இ-ள்) அன்றியும், யாவர்களும் மதிக்கா நிற்கும் நன்மை பொருந்திய புண்ணியமான துண்டாதலும், மானுஷியராகிச் சுவர்க்க லோகத்திற்குப் பொருந்திய பதவியினது பேற்றை யடைதலும், இவ்வுலகத்தின் கண் பிதா வென்பவன் கற்பித்த வார்த்தைகளைத் தாண்டாத தல்லாமல் பிற மந்திரங்களு முளதா? இல்லை. ஆதலால் உனது இதயத்தினிடத்துத் தோற்றமாகிய நீ சிந்தித்த அந்த நாமத்தை நீக்கல் வேண்டும்.

 

2820. உறைந்தவிப் பதியுள் ளோர்க்கு முறுமறை தெரிந்த பேர்க்குந்

     திறந்துரைத் திடுத றீது தாதைதன் செவிக்குந் தீதாய்ப்

     பிறந்ததோர் மொழியை நீயோர் பொருளெனப் பிதற்ற றேறா

     நிறைந்திலா வயதுக் கொத்த புந்திநீ நினைத்த தென்றார்.

53

      (இ-ள்) அன்றியும், நீ எண்ணியதை நீ யுறைந்த இந்தத் திரு மதீனமா நகரத்தி லுள்ளவர்களுக்கும் பொருந்திய வேதங்களை யுணர்ந்தவர்களுக்கும் திறந்து கூறுவது குற்றம், உனது தந்தையினது காதுகளுக்குங் குற்றமா யுண்டாகிய ஒரு வார்த்தையை நீ ஒப்பற்ற பொருளென்று உளறுதல் தெளியாத பூரணப் படாத வயதுக் கொப்பான புத்தி யாகு மென்று சொன்னார்கள்.

 

2821. அன்னையுட் டுயர நீங்க வையர்தன் வெகுளி மாறத்

     துன்னிய கிளைஞர் நெஞ்சந் துன்புறா தமைய நாளு

     மென்னையுங் காப்பர் போல வெடுத்தவர் கொடுத்த மாற்றந்

     தன்னையுள் ளுணர்ந்தி யானுஞ் சிலமொழி சாற்று வேனால்.

54

      (இ-ள்) அவர்கள் எனது தாயினது மன வருத்தமான தகலவும், தந்தையினது கோபம் நீங்கவும், நெருங்கிய பந்துக்களின் இதயமானது துன்பமுறாம லுறையவும், பிரதி தினமும் என்னையுங் காப்பாற்றுபவர்களை யொப்ப எடுத்து அவ்வாறு சொல்லிய வசனங்களை யானும் எனது சிந்தையின் கண் அறிந்து அவர்களுக்குச் சில வார்த்தைகளைக் கூறுவேன்.