பக்கம் எண் :

சீறாப்புராணம்

1062


இரண்டாம் பாகம்
 

பெருமையிற் சிறந்தவர்களாகிய அந்த முகாஜிரீன்க ளியாவர்களும் அந்தப் படியே தங்கி மேலவ னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவை வணங்கியிருந்தார்கள்.

 

2869. ஆயிழை சௌதா அபூபக்கர் மனைவி

          தன்னொடு மாயிசா அலியின்

     றாபெனும் வரிசைப் பாத்திமா நயினார்

          தரும்புதல் வியர்கணால் வரையுஞ்

     சேயினு மினிய வடிமைக ளிருவர்

          திருந்தலர் நோக்கிலா வண்ணம்

     நாயகப் பதியென் றோதிய மதீனா

          நகரினி லழைத்துவந் தனரால்.

3

      (இ-ள்) அவ்வித மிருக்க, தங்களின் புதல்வர்களைப் பார்க்கிலும் இனிமையை யுடைய அடிமையர்களான சைது அபாறாபிகு என்னு மிருவர்களும், ஆராய்ந் தெடுத்த ஆபரணங்களை யுடையவர்களாகிய சௌதா வென்னும் நபி பெருமானார் பிராட்டியாரையும் அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களின் நாயகியாருடன் ஆயிஷா றலியல்லாகு அன்ஹா, அலி றலியல்லாகு அன்கு அவர்களின் மாதா வென்று கூறும் சங்கையை யுடைய பாத்திமா றலி யல்லாகு அன்ஹா, ஆண்டவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இவ்வுலகத்தின் கண் தந்த புத்திரியாகிய காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா ஆகிய நான்கு பெயர்களையும், சத்துராதிகளான காபிர்கள் பாராத விதத்தில் தலைமையினது பட்டின மென்று கூறப்பட்ட திரு மதீனமா நகரத்தின்கண் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

 

2870. மலையெனும் புயநந் நபியுடன் கூடி

          வந்தமன் னவர்மனை யனைத்தும்

     விலையற விற்றார் மக்கமா நகரா

          ரெனுமொழி யடைந்தவர் விளம்ப

     விலைமலி கதிர்வேன் முகாசிரீன் களுக்கெம்

          மிறையவன் சுவனத்தி னிலவு

     குலவுமா ளிகைக ளொன்றுக்கா யிரமாக்

          கொடுத்தன னெனநபி யுரைத்தார்.

4

      (இ-ள்) அவ்வாறு அங்கு வந்து சேர்ந்தவர்களான அவர்கள் பருப்பத மென்று கூறா நிற்கும் தோள்களையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களோடு கூடி வந்த அரசர்களாகிய அசுஹாபி மார்களின் வீடுக ளெல்லாவற்றையும் திரு மக்கமா நகரத்தி லுள்ள