இரண்டாம் பாகம்
காபிர்கள் கிரய மின்றி
விற்றுப் போட்டார்க ளென்ற வார்த்தையைச் சொல்ல, நாயகம் நபிகட் பெருமானவர்கள் இலையைப்
போன்ற மலிந்த பிரகாசத்தைக் கொண்ட வேலாயுதத்தை யுடைய முகாஜிரீன்களுக்கு எமது இறைவனான ஹக்கு
சுபுகானகு வத்த ஆலாவானவன் சுவர்க்க லோகத்தின் கண் ஒளி வானது பிராகசிக்கின்ற மாளிகைகள்
ஒன்றுக்கு ஆயிர மாக அளிப்பா னென்று கூறினார்கள்.
2871.
பொன்னக ரதனின் மணிமனை யெமக்குக்
கொடுத்தன னிறையெனப் புகழ்ந்து
நந்நபி யுரைத்தா ரெனமுகா சிரீன்க
ணன்குற மகிழ்ந்தினி திருந்தா
ரிந்நக ரடைந்த கன்னிய ரவர்க்கென்
றியற்றிய மனைதொறு மிருந்தா
ரன்னமென் னடையி னாயிசா வெனுமா
னபூபக்க ரகத்தினி லிருந்தார்.
5
(இ-ள்) முகாஜிரீன்களாகிய
திரு மக்கமா நகரத்தினது அவ்வசுஹாபிகள் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு இறைவனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவானவன்
சொர்க்க லோகத்தின் கண் இரத்தினங்க ளழுத்திய மாளிகைகளை எங்களுக்கு அருள்வானென நன்மையுறத்
துதித்துக் கூறினார்களென்று சொல்லிச் சந்தோட மடைந்து இனிமையுட னிருந்தார்கள். இத்திரு
மதீனமா நகரத்தினிடத்து வந்து சேர்ந்த பெண்கள் தங்களுக்கென்று செய்யப் பட்ட மாளிகைகள் தோறும்
போயுறைந்தார்கள். அன்னப் பட்சியைப் போலும் மெல்லிய நடையை யுடைய ஆயிஷா றலி யல்லாகு அன்ஹா
வென்று கூறும் மாத ரானவர்கள் அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்களின் வீட்டின் கண்ணிருந்தார்கள்.
2872.
இருந்தநன் மனைவிட் டிடம்வலம் பிரியா
தியற்கையாற் காபிர்தம் மிடரால்
வருந்தமெய் நடந்த வவதிய னாலு
மதீனத்தி னசல்பெரி தாலும்
பொருந்திலாச் சலவேற் றுமையதி னாலும்
புரவலர் வனிதையர் சிறுவர்
சுரந்தனி பிடிப்ப வுடலுலைந் தொடுங்கிச்
சோர்வுறத் துன்பமுற் றனரால்.
6
(இ-ள்) அவ்வா
றிருக்க, அரசர்களான முகாஜிரீன்களும், அவர்களின் பெண்களும், பாலியர்களும் தாங்கள் தங்கியிருந்த
|