இரண்டாம் பாகம்
நல்ல மாளிகைகளை விடுத்து
இடப்புறமாவது வலப்புறமாவது நீங்கிச் செல்லாத இயல்பினாலும் காபிர்களினது துன்பத்தினால்
சரீரமானது வருத்த முறும் வண்ணம் நடந்த வேதனையினாலும், திரு மதீனமா நகரத்தின் பெரிய நோய்களினாலும்,
மாற்றமான நீரினது வேறு பாட்டினாலும், ஒப்பற்ற சுரமானது பிடிக்க, தேகமானது பலங்குறைந்து சுருங்கித்
தளர்வுறும்படி வருத்தத்தைப் பொருந்தினார்கள்.
2873.
அடைந்தவ ரெவருஞ் சுரத்தினா லறநொந்
தவதியுற் றனரென நபியுள்
ளிடைந்திரு கையேத் தருந்துஆ விரப்ப
வினிதிறை யவன்கபூ லாக்கத்
தொடர்ந்திடுஞ் சுரங்க ளியாவர்க்குந் தீர்ந்து
துன்பமற் றிருந்தனர் சுகமே
நடந்தநாட் டொடுத்து வளம்பெறு மதீனா
நகரினிற் சுரமென்ப திலையே.
7
(இ-ள்) நமது நாயகம்
நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அங்கு வந்து
சேர்ந்தவர்க ளியாவரும் அவ்வாறு சுர வியாதினால் மிகவும் வருந்தி வேதனையைப் பொருந்தினார்க
ளென்று தங்களின் மனமானது இடையப் பெற்று இரண்டு கைகளையு முயர்த்தி அருமையான துஆக் கேட்க,
இறைவ னாகிய ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவானவன் அத்துஆவை இனிமை யோடுங் கபூ லாக்க, தங்களைத் தொடர்ந்த
அச்சுர வியாதி யானது அனைவருக்குந் தீர்ந்து வருத்த மின்றிச் சுகமாக இருந்தார்கள். இஃது நிகழ்ந்த
நாள் தொடங்கிச் செல்வதைப் பெற்ற அந்தத் திரு மதீனமா நகரத்தின் கண் சுர வியாதி யென்பது
இல்லை.
2874.
மக்கமா நகர முகாசிரீன் களுக்கு
மதீனத்தன் சாரிக டமக்கு
மொக்கலின் பிரியா தனந்தரத் தவரு
முவந்தசம் பந்தரு மாக
மிக்கநந் நயினார் சேர்ந்தன ரியாரும்
விள்ளுதற் கிடமற வுடலும்
புக்கிய வுயிரும் போற்பிரி யாதங்
கவர்களும் பொருந்தியங் கிருந்தார்.
8
(இ-ள்) அன்றியும்,
மேன்மையை யுடைய ஆண்டவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் திரு மக்கமா நகரத்தினது முஹாஜிரீன்களுக்கும், திரு மதீனமா நகரத்தினது
|