இரண்டாம் பாகம்
அன்சாரீன்களுக்கும், தங்களி
னுறவிற் பிரியாது விரும்பிய அநந்தரத்தாரும் சம்பந்தத்தை யுடையவருமாக ஒருவரும் சொல்லுதற் கிடமில்லாது
அங்கு பொருந்தினார்கள். அவர்களும் சரீரமும் அதிற் புகுந்த ஜீவனையும் போல் நீங்காது சேர்ந்து
அங்கு வைகினார்கள்.
2875.
மதீனமன் னவரு மக்கமா நகர
மன்னரு நால்வரு மடுத்த
பதியின்மன் னவரு முடனுறைந் திருப்ப
வகையினிற் பண்புற நோக்கி
யிதமுறப் பள்ளி யெடுத்தன மினியிவ்
விறசபு மாத்தையின் முதலாய்
நுதிதரும் வேலீ ராசுறா நோன்பு
நோற்பதை நோக்குவீ ரெனவும்.
9
(இ-ள்) அவ்வாறு வைக,
திரு மதீனமா நகரத்தி னரசர்களாகிய அன்சாரீன்களும், திரு மக்கமா நகரத்தி னரசர்களாகிய
முகாஜிரீன்களும், அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு, உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு, உதுமா
னிபுனு அப்பான் றலி யல்லாகு அன்கு, அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு, ஆகிய நான்கு பேர்களும்,
பக்கத்திலுள்ள நகரத்தினது அரசர்களும், தங்களோடு கூடத் தங்கியிருக்க, அந்தச் சபையிற் றகுதி
யுறும் வண்ணம் பார்த்து நாம் நன்மையானது பொருந்தும்படி பள்ளியைக் கட்டி முடித்தோம். இனி இந்த
றஜபு மாதத்தில் துவக்கமாக நுனியைக் கொண்ட லோயுதத்தை யுடைய சஹாபாக்களே! நீங்கள் களங்கமானது
வந்து சேரப் பெறாத விரதத்தைப் புரிவதை விரும்புவீர்க ளென்றும்.
2876.
இற்றைநாட் டொடுத்தைந் தொகுத்தினும் வாங்கென்
றியற்றிய திருமொழி சிதையா
துற்றவ ரெவருங் கொணர்மின்க ளெனவு
முடையவன் றிருநபி யுரைத்தார்
கற்றவல் லோர்க ளியாவரும் விரும்பிக்
கருத்துறும் படிமுடித் துவந்தார்
வெற்றியும் புகழுந் தழைத்தினி தோங்கி
வீறுபெற் றிருக்குமந் நாளில்.
10
(இ-ள்) இங்கு
பொருந்திய நீங்க ளியாவரும் இன்றையத் தினமுதற் கொண்டு ஐந்து நேரத்திலும் வாங்கென்று விதித்த
தெய்வீகந் தங்கிய வசனத்தைச் சிதையாமல் கொண்டு வாருங்களென்றும், யாவற்றையுஞ் சொந்தமா
யுடையவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவினது அழகிய நபியாகிய நாயகம் நபிகட்
|