பக்கம் எண் :

சீறாப்புராணம்

1066


இரண்டாம் பாகம்
 

பெருமானார் முகம்மது முஸ்தபா றசூல் சல்லலாகு அலைகிவசல்ல மவர்கள் கூறினார்கள். அக் கூற்றைப் படித்த வல்லுநர்களாகிய அவர்களனைவரும் விருப்பமுற்று இதயத்தின் கண் பொருந்தும் வண்ணம் நிறைவேற்றி உவப்படைந்து மிகுத்த விஜயமும் கீர்த்தியும் தழைப்புற்று இனிமையோடும் வளர்ந்து பெருமையடைந் திருக்கு மந்தத் தினத்தில்.

 

2877. முருகயின் றினவண் டிசைத்தகம் பலையின்

          முழக்கறா நறுமலர்த் துடவை

     விரிபரப் புடுத்த மதீனமா நகரின்

          கொறியுடைத் தொருவரில் வியந்தோ

     னுருளுலம் பொருத புயத்தின னுகுபா

          னென்னுமப் பெயரினை யுடையோன்

     றிரளொருச் சிதகா முளரியி னடைந்து

          காப்பொடுங் கொடுநிதந் திரிவான்.

11

      (இ-ள்) கூட்ட மாகிய வண்டுகள் மதுவை யருந்திப் பாடிய கீதத்தினது ஓசையானது ஒழியாத வாசனையைக் கொண்ட புஷ்பங்ளை யுடைய சோலைகளின் விரிந்த பரப்பை யுடுக்கப் பெற்ற திருமதீனமா நகரத்தினது ஆடுகளை யுடைய இடையர்களில் அதிசயத்தை யுடையவனும் திரண்ட கல்லைப் போன்ற தோள்களை யுடையவனுமான உகுபா னென்று கூறும் அவ் வபிதானத்தை யுடையவன் கூட்ட மாகிய தனது ஆடுகளானவை சிதகாதபடிப் பிரதி தினமும் காட்டி னிடத்துப் போய் அவைகளைக் காவலுடன் கொண்டு திரிவான்.

 

2878. கொறிநிரை திரட்டி நெடுவனம் புகுந்தோர்

          குவட்டடி மருங்கினிற் பசும்புற்

     செறிதரு மிடத்தில் விடுத்தொரு தருவி

          னீழலிற் றனிசிறந் திருப்ப

     நிறைதரு நீத்தம் பரந்தெனப் பொறையு

          மடவியு நிழல்செறி பொதும்பு

     மறைதரு திடரு மருவிநீ ரிடமு

          மலிதரப் பரந்துமேய்ந் தனவால்.

12

      (இ-ள்) அவ்வாறு திரியும் அவன் ஒரு நாள் தனது ஆட்டின் கூட்டங்களை ஒன்று சேர்த்து நெடிய காட்டில் நுழைந்து ஒரு மலையினது அடிவாரத்தின் பக்கத்தில் பசிய புற்கள் நெருங்கிய தானத்தில் அவைகளை விட்டு ஓர் மரத்தினது நிழலினிடத்து ஒப்பறச் சிறந்திருக்க, அவ்வாடுகள் பூரணப்பட்ட ஜலமானது பரவியதைப் போன்று அந்த மலையின் கண்ணும் காட்டின் கண்ணும் நிழலானது செறியப் பெற்ற சோலைகளின் கண்ணும்