இரண்டாம் பாகம்
சல்மான் பாரிசுப் படலம்
எழுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்
2892.
பூண்டநன் கலம்போற் காரண வரைகள்
புடையுடுத் திருந்தமக் காவில்
கூண்டிருந் தெழுந்து மதீனமா நகரிற்
குலத்தொடு மினிதுறப் புகுந்தோ
ராண்டுசென் றதற்பி னகுமது மறையோ
ரணிதர விருக்குமந் நாளிற்
காண்டகண் களிப்ப வந்தொரு முதியோன்
கட்டுரை யொடுஞ்சலா முரைத்தான்.
1
(இ-ள்) புறுக்கானுல்
அலீ மென்ற வேதத்தை யுடையவர்களான அஹ்ம தென்னும் திரு நாமத்தை யுடைய நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள்
நல்ல ஆபரணங்களை யணிந்ததைப் போலும் காரணத்தினது மலைகளை மருங்கிற் றரித் துறைந்த திரு மக்கமா
நகரத்தின் கண் தங்களின் கூட்டத்தார்களோடுங் கூட்ட முற்றிருந் தெழும்பித் திரு மதீனமா நகரத்தில்
வந்து சேர்ந்து இனிமையுற ஒரு வருடங் கழிந்த பின்னர் அழகுடனிருக்கின்ற அத் தினத்தில், பார்த்த
நயனங்க ளானவை மகிழ்ச்சி யடையும் வண்ணம் ஒரு கிழப் பருவத்தை யுடையோன் வந்து சத்திய வசனங்களோடும்
ழுஅஸ்ஸலாமு அலைக்குழு மென்று சலாஞ் சொல்லினான்.
2893.
வந்தநன் முதியோன் முகமலர் நோக்கி
மறுமொழி கொடுத்தவ ணிருத்திச்
சிந்தையிற் கனிவும் வணக்கமு மொழுக்கச்
செய்கையும் பொறுமையுந் தரித்தா
னிந்தநற் குணத்தோ னியாவனென் றறிய
வேண்டுமென் றிதயத்தி னமைத்துச்
சுந்தரப் புயத்தோய் நின்வர வெனக்குச்
சொல்லுக வெனநபி யுரைத்தார்.
2
(இ-ள்) அவ்வாறு வந்த
நல்ல கிழப் பருவத்தை யுடையவனான அவனது வதன மாகிய தாமரைப் புட்பத்தை நாயகம் நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் பார்த்து அவன் கூறிய
சலாமிற்கு ழுவஅலைக்கு முஸ்ஸலாழு மென்ற பிரதி பதத்தைச் சொல்லி அங்கு இருக்கும்படி செய்து மனதின்
கண் இரக்கத்தையும், பணிவையும்,
|