இரண்டாம் பாகம்
செவ்வியர் பலகா லுரைத்தலுந் தேறித்
திருமறை முழக்குமா வணத்தின்
கவ்வையு மொடுங்கா மதீனமா நகரிற்
காத்திருந் தனன்சில நாளால்.
15
(இ-ள்) இந்தப் படியாகத்
திரிந்து தங்களை விசாரித்த பெரியோர்கள் கணக்கிலர். இஃதெல்லாவற்றையும் யான் தெரிந்தும்,
அழகிய மேகக் குடையை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் திரு மதீனமா நகரத்தின் கண் வருவார்களென்று செவ்வியர்கள் பல தடவை
கூறியதையு மனதினிடத்துத் தெளிந்து சில தினமாக தெய்வீகந் தங்கிய வேத வசனங்களினது ஓசையும்,
கடை வீதிகளினது ஓசையும், அடங்காத இந்தத் திரு மதீனமா நகரத்தின் கண் காத்திருந்தேன்.
கலிநிலைத்துறை
2907.
சுரிமு கக்குட வளைக்குலஞ் சூலுளைந் தீன்ற
தரள வெண்டுளித் திரையெறி தடந்திகழ் சாமின்
வருமெ கூதிக டலைவரி லிபுனுகை பானென்
றுரைத ரும்பெய ரினர்மறை யாவையு முணர்ந்தோர்.
16
(இ-ள்) அவ்வா
றிருக்க, முறுகிய முகத்தை யுடைய குடத்தைப் போன்ற சங்குக் கூட்டங்கள் கருப்பத்தினால் வருந்திப்
பெற்ற முத்துக்களை வெள்ளிய துளிகளை யுடைய அலைகளானவை கரைகளில் வீசா நிற்கும் வாவிகள் பிரகாசிக்கின்ற
ஷா மிராச்சியத்தின் கண் வந்த எகூதிகளினது தலைமைத் தனத்தை யுடையவர்களில் இபுனு கைபானென்று
சொல்லுகின்ற அபிதானத்தை யுடையவர். எல்லா வேதங்களையுந் தெரிந்தவர்.
2908.
உததி சூழ்தரு பாரிடைத் திசைதொறு முலவிப்
பதிக டோறினுந் திரிந்துநற் பழமறைக் குரித்தாய்
மதின மாநக ரிடைமுகம் மதுவரு குவரென்
றிதமித் தன்புறுங் கருத்தொடு மிவணில்வந் தடைந்தார்.
17
(இ-ள்) சமுத்திரஞ்
சூழ்ந்த இப் பூமியின் கண் திக்குக ளெல்லா வற்றிலும் சஞ்சரித்து நகரங்கள் முழுவதிலுந் திரிந்து
நன்மை பொருந்திய பழைய வேதங்களுக்குச் சொந்தமாய்த் திரு மதீனமா நகரத்தின் கண் முகம்ம தென்பவர்
வருவா ரென்று ஒருமனப்பட்டு அன்பானது நிலைக்கப் பெற்ற சிந்தனை யோடும் இவ்விடத்தில் வந்து சேர்ந்தார்.
|