பக்கம் எண் :

சீறாப்புராணம்

1082


இரண்டாம் பாகம்

 

2909. ஆதி நாயகன் றிருநபி வருவதிங் கணித்தென்

     றோதி மாசறப் பனீகுறை லாவிடத் துறைந்து

     நீதி நன்னெறி விலகுதற் பவநெறி நிகழ்த்திப்

     போத நேர்தரக் காத்திருந் தனர்சில போழ்தால்.

18

      (இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்து யாவற்றிற்கும் முதன்மையைக் கொண்ட நாயகனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய நபி யாகிய நாயகம் நபிகட் பெருமானார் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சமீப காலத்தில் இங்கு வந்து சேர்வார்க ளென்று களங்க மறக் கூறிப் பனீகுறைலா வென்னுங் கூட்டத்தார்களிடத்திற் றங்கிச் சில காலமாக நீதியை யுடைய நன்மை பொருந்திய சன்மார்க்கத்தையும் நீங்குதலான தீமையினது ஒழுங்குகளையும் எடுத்துச் சொல்லிப் புத்தியானது நேர்மை பெறக் காத்திருந்தார்.

 

2910. இங்கி வர்க்குறு மறிவினிற் றலைவர்க ளிலையென்

     றங்கை நீட்டிநற் பதம்பணிந் தவர்களா சரிப்பப்

     பங்க மற்றவன் விதிவழி யிவருயிர் பருகப்

     பொங்கி வந்ததா யாசமென் றொருபெரும் புலியே.

19

      (இ-ள்) அவ்வித மிருக்க, இந்தத் திரு மதீனமா நகரத்தின் கண்  இவ் விபுனு கைபா னென்பவருக் குண்டாகிய அறிவிலும் மிகுத்த அறிவை யுடைய தலைவர்க ளில்ல ரென்று அவர்கள் தங்களின் அழகிய கைகளை நீட்டி இவரின் பாதங்களிற் றாழ்ந்து வழிபட, குற்ற மற்றவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவினது கற்பனையின் பிரகாரம் இவரினது ஆவியை அருந்தும் வண்ணம் இளைப்பென்று சொல்லும் ஒப்பற்ற பெரிய ஓர் புலியானது பொலிவுற்று வந்தது.

 

2911. வீர முக்குயர் பனீகுறை லாவெனும் வேந்த

     ரியாரை யும்விளித் தியனபி யொல்லையி னிவணிற்

     கார்நி ழற்றிட வருவர்செய் வினைப்பவங் களைந்து

     சாரு நற்பெரும் பதவிபெற் றிடுவிர்க டாழ்ந்தே.

20

      (இ-ள்) அவ்வாறு வர, அவர் வலிமையானது மிகவாயோங்கப் பெற்ற பனீ குறைலா வென்று கூறுங் கூட்டத்தினது அரசர்க ளனைவரையுங் கூப்பிட்டு இயல்பை யுடைய நபியாகிய நாயகம் நபிகட் பெருமானார் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் மேகங்களானவை குடையினது நிழலைச் செய்யும் வண்ணம் விரைவில் இந்தத் திரு மதீனமா நகரத்தின் கண் வந்து சேர்வார்கள். நீங்கள் அவர்களைப் பணிந்து இயற்றிய செய்கையினது பாவங்களை யில்லாமற் செய்து